அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அளித்த தீர்ப்பில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் தீர்மானமும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் தீர்மானம் செல்லும் என்றும் உத்தரவிடப்பட்டது.


இந்த நிலையில், இந்த தீர்ப்பின் 128 பக்க நகல்கள் வெளியாகியுள்ளது. இதில், இடம்பெற்றுள்ள முக்கிய சாராம்சங்களை கீழே விரிவாக காணலாம்.



  • ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகிகள் கூட்டியதில் தவறில்லை

  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? என்பது குறித்து பிரதான வழக்கில்தான் முடிவு எடுக்க முடியும்.

  • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாத நிலையில் இருவரும் சேர்ந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட முடியாது

  • இரு தலைவர்களும் இணைந்து தான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்பது தற்போது சாத்தியமில்லாதது . இந்த உத்தரவு கட்சியின் செயல்பாட்டை முடக்கிவிடும்

  • ஜூன் 23-ந் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், ஜூன் 23-ந் தேதிக்கு முந்தையை நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட முடியாது.

  • அ.தி.,மு.க. பொதுக்குழுவிற்கு தலைமை நிலைய செயலாளர் அறிவிப்பு வெளியிட்டதில் தவறில்லை

  • ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோதுதான் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டதால் தனக்கு தெரியாது என ஓ.பி.எஸ். தரப்பு கூறுவதை ஏற்க முடியாது

  • பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி விட்டுக்கொடுத்தார்

  • 2 பேரும் இணைந்து பொதுக்குழுவை கூட்ட இயலாத நிலையில், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடும் நிலைக்கு தள்ள முடியாது

  • ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் என்ற தீ்ரமானம் செல்லும் 

  • எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த தீர்மானம் செல்லும் 


இந்த முக்கிய அம்சங்கள் நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் இடம்பெற்றுள்ளது. 


மேலும் படிக்க : D Jayakumar: “தர்மம் வென்றிருக்கிறது; ஓபிஎஸ்சை நீக்கியது செல்லும்” - ஜெயக்குமார் சரவெடி


இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்த காரணத்தால் அவரது ஆதரவாளர்களும், தொண்டர்களும் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். அதேசமயத்தில், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தேனியில் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். 


நீதிமன்ற தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்ததால் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அ.தி.மு.க.வின் பதவியை மீண்டும் மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : கட்சியை மீண்டும் கைப்பற்றிய இ.பி.எஸ்..! உச்சநீதிமன்றத்துக்கு ஓடும் ஓ.பி.எஸ்? ஓயாத அதிமுகவின் அலப்பறைகள்!


மேலும் படிக்க : ADMK Case Live : அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி