அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் செயல்பட உள்ளார். இது எடப்பாடி பழனிசாமி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியதால் ஓ.பன்னீர்செல்வம், எம்.பி. ரவீந்திரநாத் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆகியோர் நீக்கப்பட்ட உத்தரவு செல்லும் என்ற நிலை உருவாகியுள்ளது.   


நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு எதிராக வந்ததையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். விரைவில் உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.