கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி விசிகவிற்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் நகராட்சி தலைவர் தேர்தலின் போது  விசிக சார்பில் கிரிஜா என்பவரும், அவரை எதிர்த்து கூட்டணி கட்சியான திமுகவை சேர்த்த ஜெயந்தி என்பவரும் போட்டியிட்டதில், அதிக வாக்குகளை பெற்று திமுகவை சேர்ந்த ஜெயந்தி வெற்றி பெற்றார். இந்த நிலையில் துணைத் தலைவர் பதவிக்கும் விசிக சார்பில் கிரிஜா மீண்டும் போட்டியிட்டார்.

 


விசிக வேட்பாளர் கிரிஜா


 


இதனை எதிர்த்து மீண்டும் திமுக சார்பில் ஜெயபிரபா என்பவர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார் இதில் விசிக வேட்பாளர் கிரிஜாவை தோற்கடித்து திமுக வேட்பாளர் ஜெயபிரபா வெற்றி பெற்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி மதியம், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடத்தில் வெற்றி பெற்ற இடங்களில் திமுகவினரை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என திருமாவளவன் ட்விட்டரில் திமுக தலைவருக்கு கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் நெல்லிக்குப்பம் தலைவர் அல்லது துணைத் தலைவர் பதவியை விசிகவினருக்கு ஒதுக்க கோரி நெல்லிக்குப்பத்தில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

பின்னர் நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்திற்கு வெற்றிபெற்ற திமுக வேட்பாளருடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் முன்னிலையில் ராஜினாமா செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஜெயபிரபா என்பவரிடம் திமுகவை சேர்ந்த எம்எல்ஏ பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜெயபிரபா பேச்சுவார்த்தையின் பொழுது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுயநினைவு இன்றி போனார்.



மயங்கி விழுந்த நகராட்சி துணைத்தலைவர் ஜெயப்பிரபா


 



பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது ஆனால் நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த மியூசிக் ஆடினர் உள்ளே விடாது தான் வெகு நேரம் காத்திருந்த நிலையை திமுகவை சேர்ந்த துணைத்தலைவர் ஜெயப்பிரபாவை மற்ற வார்டு கவுன்சிலர்கள் தூக்கிக்கொண்டு வந்து ஆம்புலன்சில் ஏற்றினர். அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் காரில் ஏறி செல்ல முயன்ற போது காரை மறித்து விசிகவினர் காரை தட்ட ஆரம்பித்தனர்.

 


 

இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த காவல் துறையினர் சட்டமன்ற உறுப்பினரை மறித்த விசிகவினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைய செய்தனர்.  பின்னர் கடந்த இரண்டு நாட்களாக நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோரிடம் கட்சி முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகராட்சி தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் வீடுகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

 

ஆனால் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்ற ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பதவி விலக மறுப்பு தெரிவித்ததால் துணைத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக ஜெயபிரபாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை பதவி விலக கோரினர். அதன் அடிப்படையில் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெயபிரபா பதவி விலகி உள்ளார். விசிகவிற்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது ஆனால் அதனை ராஜினாமா செய்யாமல் திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவியை திமுகவினரை ராஜினாமா செய்ய வைத்திருப்பது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.