தமிழக முழுவதும் மின் கட்டணம் விரைவில் உயர்த்தப்படும் என சில நாட்களுக்கு முன்பு மின்சாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று தமிழக முழுவதும் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மின் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடாது சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். பாஜக மாநில துணைத் தலைவர் 
கே.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.



அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறுகையில், தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து தமிழக முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கடிதம் வழங்கியது கட்டணத்தை உயர்த்துவதற்காக அல்ல. மின்வாரியத்தை மேம்படுத்துவதற்கும் சோலார் திட்டத்தை முறையாக அமல்படுத்துவதற்கு மட்டுமே கடிதங்கள் வழங்கினோம். கட்டண உயர்வுக்கு இதுவரை மத்திய அரசு கடிதம் வழங்கவில்லை என்றார். சோலார் மற்றும் விண்ட் எனர்ஜி திட்டத்தினை தமிழக அரசு பயன்படுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது, ஆனால் லைசன்ஸ் கொடுக்கும் முறையில் மாநில அரசு தடையாக உள்ளது என்று கூறினார்.



, செந்தில் பாலாஜி நினைத்தால் ஒரே கையெழுத்தில் இரண்டு மாதத்திற்கு மின் கட்டணம் கணக்கிட்டு முறையை ஒரே மாதத்தில் கணக்கிடும் முறையாக மாற்ற முடியுமா? எனக் கேள்வி எழுப்பிய அவர், அயோக்கியத்தனத்தின் மொத்த உருவமாக தமிழக மின்துறை செயல்பட்டு வருகிறது என்று பேசினார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணம் உயர்வை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் இல்லை எனில் வருகின்ற 27 ஆம் தேதி கரூரில் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எச்சரித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண