எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை இன்று சந்தித்தனர். கோடநாடு விவகாரம் மீண்டும் பூதாகாரம் ஆகியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்தசந்திப்பின்போது, கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை சம்பவத்துக்கும் அதிமுக நிர்வாகிகள் யாருக்கும் தொடர்பு இல்லை என்றும், ஆனாலும். இந்த வழக்கு விசாரணை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்படுவதால் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் சிலரை சிக்க வைக்க வாய்ப்புள்ளதாக சந்தேகப்படுப்படுவதால், கொடநாடு கொள்ளை வழக்கை முதலில் இருந்து விசாரணை நடத்த அனுமதிக்கக்கூடாது. ஏற்கெனவே நடைபெற்ற வழக்கு முடியும் தருவாயில் உள்ளதாகவும், அதனடிப்படையில் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆளுநர் உடனான சந்திப்பின்போது, அதிமுக மூத்த நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் உடனிருந்தனர். நேற்று சட்டமன்றத்தில் கோடநாடு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றும், இன்றும் கூட்டத்தொடரை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், இன்று ஆளுநருடன் அதிமுக தலைவர்கள் சந்திப்பு நடந்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்பு தான் கோடநாடு வழக்குக்குறித்து விசாரணையை துரிதப்படுத்துவோம் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் தான், அதிமுகவினரும் பொய் வழக்கினை திமுக தொடுக்க முயல்வதாகக் குற்றம் சாட்டி சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் தன்னை இந்த கொலை, கொள்ளை வழக்கில் இணைக்க சதி நடப்பதாக முன்னாள் தமிழக முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
கேரளாவைச் சேர்ந்த சயன், வாளையர் மனோஜ், உதயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே இதில் சயன்மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நிபந்தனை ஜாமினில் உள்ளனர். மற்ற எட்டு பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது, காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த வழக்கில் கூடுதல் விசாரணை தேவையுள்ளது என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியதையடுத்து சயனை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோத்தகிரி காவல்துறை சம்மன் அனுப்பியது.
நீதிமன்றத்தில் உத்தரவினையேற்று விசாரணைக்கு ஆஜரான சயனிடம் தொடர்ந்து 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், கோடநாடு பங்களாவில் உள்ள அறைகள், ஜன்னல்கள், செல்லும் வழி என அனைத்து தகவல்களையும் அறிந்த ஆளம் கட்சியைச்சேர்ந்த ஒருவர் தான் இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்று சயன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலம் தமிழகத்தில் பெரும் பரபரப்பினை ஏற்பத்தியுள்ளது. இந்நிலையில் தான் விசாரணை அதிகாரி வேல்முருகன், ஆகஸ்ட் 27 ஆம் தேதி தான் வழக்கு விசாரணைக்கு வருவதால் அப்போது தான் இந்த வழக்கு குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கை தெரிய வரும் என்று குறிப்பிட்டுள்ளார். அன்றைய தேதி தான் சயானிடம் போலீசார் நடத்திய விசாரணை குறித்த முழு விபரம் நீதிமன்றத்தில் அறிக்கையாகத் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து தான் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனக்கு எதிரா பெரிய சதி நடக்குது.. EPS ஆவேசம் | Kodanad case | ADMK | EPS | MK Stalin | ADMK Protest