கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள சதீஷன், சந்தோஷ் சாமி உள்ளிட்ட 3 பேர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமின்றி சசிகலா மற்றும் சுதாகரனை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.