கேரள மாநிலம் வயநாட்டில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடப்பட்டிருக்கிறது. இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சூறையாடியதாக, இளைஞர் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
காரணம் தெரியவில்லை:
நேற்று பிற்பகல் 3 மணியளவில் sfi இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், ராகுல் காந்தி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மேலும் அங்கு பணி புரிபவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஏன் இவ்வாறு நடத்தினார்கள் என தெரியவில்லை என காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். மேலும் சிபிஐ(மார்க்சிஸ்ட்) தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக வேணுகோபால் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்