அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட ஓபிஎஸ் மீது பாட்டில்கள் வீசப்பட்டன என ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் பேட்டி அளித்துள்ளார்.  


இது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் பேசும் போது, “ அதிமுக பொதுக்கூட்டத்தில் எல்லோரும் சொல்லிக்கொடுத்ததை ஒப்புவித்ததை போல ஒற்றைத்தலைமை, ஒற்றைத்தலைமை என்று கோஷம் எழுப்பினர். அது எனக்கு மிகுந்த வருத்ததை அளித்தது. செயல்திட்டத்தில் இல்லாத ஒன்றை இங்கு அரங்கேற்ற வேண்டாம் என பொதுகுழுவில் நான் வலியுறுத்தியதோடு, இது கட்சியை பேராபத்தில் கொண்டு போய் விடும் என நான் கூறினேன்.அதற்கு வைத்தியலிங்கம்  நன்றி கூறினார்.


 






தொடர்ந்து நாங்கள் எழுந்து வந்து விட்டோம். இரட்டைத்தலைமையில் கட்சி சுமூகமாக போய்க்கொண்டிருந்த நிலையில் 9 லிருந்து 14 ஆம் தேதிக்குள் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள தொண்டர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். நடந்ததை  வைத்து பார்க்கும் போது கட்சியின் நிர்வாகிகள் ஈபிஎஸ் பக்கமும், அடிப்படைத்தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமும் நிற்பதை என்னால் பார்க்க முடிகிறது. இது தொண்டர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே நடக்கும் போர். கட்சியை பற்றி கவலைக்கொள்ளாத சில தலைவர்கள் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.” என்று பேசுகிறது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண