100 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில்  சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.


கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக எழுதி பெற்றதாக அளித்த புகாரின் பேரில், வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக முன் ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் 2 முறை மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. 


 





அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது 100 கோடி ரூபாய்  மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 10 நபர்களின் வீடுகளில் கடந்த வாரத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து நேற்று முன்னாள் அமைச்சர் உறவினரும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி கவின் வீட்டில் அவரது தந்தை குழந்தைவேலுடன் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி பகுதியில் உள்ள அம்மன் நகரில் கவின் இல்லத்தில் சிபிசிஐடி ஆய்வாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. தற்போது கவின் அங்கு இல்லை என்பதால் அவரது தந்தையிடம் விசாரணை நடத்தினர்.




 


கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக ஐ.டி விங் நிர்வாகி பசுபதி செந்தில் உள்ளிட்ட 3 பேரை நேரில் அழைத்து வந்து தீவிர விசாரணை.


கரூரில் இரண்டு முறை சிபிசிஐடி  போலீசார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவருடைய ஆதரவாளர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்மையில் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து விஜயபாஸ்கரின் உறவினரும், ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான கவின்ராஜ் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த சென்ற நிலையில், அவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தினரிடம் விசாரித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.


 




அதனைத் தொடர்ந்து கரூர் திண்ணப்பா நகர் பகுதியில் அமைந்துள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், ஈரோடு மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை தலைவர் பசுபதி செந்தில் உள்ளிட்ட 3 பேரை நேரில் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.