Arvind Kejriwal: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு:
மக்களால் தேர்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிணையில் இருப்பதற்கும், விசாரணையை நடத்துவதற்ககும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும், கெஜ்ரிவால் ஊழல் பணத்தை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதாக அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகள் தொடர்பான மனுக்களை, உச்ச நீதிமன்றம் பெரிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தீபங்கர் தத்தா அடங்கிய தனி நீதிபதி அமர்வு, கெஜ்ரிவாலின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை மே 17ஆம் தேதி ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.
கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவாரா?
உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் என்பது, அவருக்கு எதிராக அமலாக்க இயக்குனரகம் தொடர்ந்த பணமோசடி வழக்கு தொடர்பானது மட்டுமே. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கும் வரை கெஜ்ரிவால் திகார் தான் சிறையில் இருப்பார்.
இடைக்கால ஜாமின் மேல்முறையீடு:
கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இருப்பினு நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போது பரப்புரை மேற்கொள்வதற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. தேர்தல் பரப்புரை முடிந்ததும் அவர் சிறையில் சரணடைந்தார். அதனை தொடர்ந்து, ஜாமின் கோரி கெஜ்ரிவால் சார்ரபில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் முடிவில் , கெஜ்ரிவாலுக்கு சாதகமாக இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், சிறையில் இருந்து வெளியே வருவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. விசாரணை நீதிமன்றம் ஜாமின் உத்தரவு வழங்கி இருந்தமைக்கு எதிராக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.