அரசியலுக்கு வரும் பெண்கள் மீது ஆபாச தாக்குதல் நடத்தினால் பயந்து ஓடி விடுவார்கள் என நினைக்கிறார்கள். எனக்கு இது புதிதல்ல பாஜகவின் பி டீம் தான் நாம் தமிழர் கட்சி என கடுமையாக சாடியுள்ளார். பேரறிவாளன் விடுதலை குறித்து கருத்து கூறிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், மறைந்த முன்னாள் முதல்வர் என்ன பெரிய தியாகியா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது டிவிட்டர் பக்கத்தில் சீமான் பாலியல் குற்றவாளி சட்டம் சரியாக விசாரித்து இருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என கூறியிருந்தார். இந்த நிலையில், இதற்கு பதில் அளித்துள்ள சீமான், கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என கடுமையான விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று கரூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எம்பி ஜோதிமணி, கரூர் தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்துள்ளனர் என பேசிய சீமான் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். கரூர் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்கள் உழைத்து வாழக் கூடியவர்கள். சீமான் போல இலங்கை தமிழ் மக்களை, தமிழர்களை சுரண்டி ஆடம்பர, உல்லாச வாழ்க்கை வாழக்கூடியவர்கள் இல்லை. கரூர் மக்களை தொகுதி பேச சீமானுக்கு அருகதை இல்லை என கடுமையாக சாடினார்.
சீமான் மீது பாலியல் வழக்கு, நீதிமன்ற தீர்ப்பு இல்லை எந்த அடிப்படையில் சீமானை பாலியல் குற்றவாளி என கூறுகிறீர்கள் என்ற கேள்விக்கு - நடிகை விஜயலட்சுமி பொது வெளியில் சீமான் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். உண்மை இல்லை என்றால் இதற்கு ஏன் சீமான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை. பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம். சீமான் பாலியல் குற்றவாளி என கூறினார்.
பெண்கள் மீது ஆபாச தாக்குதல், அவதூறு பரப்பினால் என்னைப்போன்ற பெண்களை அரசியலை விட்டு விரட்டலாம் என்று சீமான் போன்றவர்கள் நினைக்கிறார்கள். இந்த மாதிரியான தாக்குதல்கள் எனக்கு புதிதல்ல பாரதிய ஜனதா கட்சியிலும் எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தாக்குதல்கள் நடந்து வருகிறது. சீமான் பாஜகவின் B டீம். கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மானங்கெட்டு ஜோதிமணிக்கு வாக்களித்ததாக பேசிய சீமான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.
கருத்து முரண்பாடு காரணமாக நாம் தமிழர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள், சீமான் போன்ற ஆபாச வக்கிர அரசியல்வாதிகளை பின்பற்றி, தவறான பாதைக்கு சென்று விடக்கூடாது. எனவே, சீமான் போன்ற நபர்களை தொடர்ந்து தோலுரிக்கும் பணியை செய்வோம் என்று தெரிவித்தார். அப்போது பேரறிவாளன் விடுதலை ஆகி வந்தபோது, முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து நலம் விசாரித்த நிகழ்வு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு சீமான் குறித்து மட்டுமே பேச வந்ததாக சொல்லிய எம்.பி ஜோதிமணி அடுத்த கேள்விக்கு சென்றார்.