புகைப்படக்கண்காட்சி10-ஆம் நாள் மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சி


 




 பொதுப்பணித்துறை (கட்டடங்கள்), நெடுஞ்சாலைகள்  மற்றும்  சிறு துறை முகங்கள் அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் V செந்தில்பாலாஜி  கரூர் திருவள்ளுவர் மைதான திடலில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி " என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை (25.01.2023)அன்று தொடங்கி வைத்தார்கள். 


ALSO READ | Vani Jairam: மறைந்த பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ... சோகத்தில் திரைத்துறையினர்!




அதனைத் தொடர்ந்து 10-ஆம் நாள் மற்றும் நிறைவுநாள் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை பரணி பார்க் மெட்ரிக் பள்ளி மாணவன் ச.நேமிநாத்தின் கீபோர்டு இசை நிகழ்ச்சியும், கரூர் பசுபதிபாளையம் சாரதா மெட்ரிக் பள்ளி மாணவி கோபிகா அவர்களின் கரகாட்டம், கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் குழ, கரூர் சேரன் மெட்ரிக் நடுநிலைப்பள்ளி மாணவர்களின் காவடியாட்டம், மாணவியர்களின் ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது.


 


 




நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்  திரு.சக்திவேல், வட்டார கல்வி அலுவலர் திருமதி மணிமாலா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி சத்தியாவதி, கலை ஒருங்கிணைப்பாளர் திரு.ஆனந் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ALSO READ | Vani Jayaram Passes Away: 'மறைந்தது கானக்குயில்..' இந்தியாவின் பிரபல பாடகி வாணி ஜெயராம் காலமானார் - ரசிகர்கள் சோகம்..!