தமிழகத்தில் கள்ளசாராயம் மதுவினால் தற்போது 25 பேர் பலியாகி உள்ள சம்பவத்திற்கு  தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என கரூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூரில்  உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, நீலகிரி மாவட்ட பார்வையாளர் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பூத் கமிட்டியின் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும் நிர்வாகிகள் செயல்பாடு இவ்வாறு இருக்க வேண்டும் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினர்.




இந்த மாவட்ட செயற்குழு கூட்டத்தில் ஒன்பது ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்து வரும் பாரத பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், கரூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இந்த பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படாமல் ஊழல் செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், குளித்தலையில் நிரந்தர பேருந்து நிலையம் அமைக்க வழிவகை செய்யாமலும், தற்காலிக பேருந்து நிலையத்தை சரி செய்ய  காலதாமிடம் செய்து வரும் குளித்தலை நகராட்சி கண்டித்தும், தமிழகத்தில் கள்ளசாராயம் மற்றும் மதுவினால் தற்போது 25 பேர் உயிரிழந்திருப்ப பேருக்கு தார்மீக பொறுப்பேற்ற மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டுமென என மொத்தம் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில் :  தமிழகத்தில் கள்ள சாராயம் மற்றும் மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எந்தவித நடவடிக்கையும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தாததால் தற்போது மரக்காணம், செங்கல்பட்டு, தஞ்சாவூர்  பகுதியில் கள்ளசாராயம் மற்றும் மதுவினால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அதற்கு அத்துறையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று தனது பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது தமிழக முதல்வர் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென இன்று நடைபெற்ற கரூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்





மேலும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாகவும், மதுவினால் அதிக விதவைகள் தமிழகத்தில் உள்ளதாக கூறிய பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தற்போது தமிழகத்தில் 25 உயிர்கள் கள்ளச்சாராயம் மதுவினால் பலியாகி இருப்பதற்கு எந்தவித கருத்துகளையும் கூறவில்லை எனவும் இது குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இந்த செயற்குழு கூட்டத்தில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.