கரூர் என்றாலே கரு உருவான ஊர் என்று பெயர் உண்டு. ஆனால் அது தற்போது மாறி கரூர் என்றாலே அது அரசியலுக்கு கருவாக உள்ள ஊர் என பெயரெடுத்து உள்ளது.
தமிழ் நாட்டு தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து சொல்வது முதல் அவர்களை வித்தியாசமான முறையில் சுவரொட்டிகள் மற்றும் வால் போஸ்டர்கள் மூலம் பாராட்டு தெரிவிப்பது மற்றும் தங்களது போராட்டம், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் பல்வேறு விதமான வால் போஸ்டர்கள் ஒட்டி வரும் நிலையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அவரது விசுவாசிகள் 8 பேர் அடங்கிய வால் போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அரசியல் கட்சி என்றாலே கோஷ்டி பூசல்கள் உள்ளது. இந்நிலையில் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், உயர் பதவிக்கு வந்தாலோ அல்லது உயர் பதவியில் இருந்தாலும் அவர்களை மகிழ்விக்கும் விதமாக ஆங்காங்கே அவருக்கு சுவரொட்டிகள், வால் போஸ்டர், பேனர் உள்ளிட்ட விளம்பரங்கள் மூலம் அவர்களை பார்வைக்கு தங்களது செயல்பாடுகளை கொண்டு சென்று வருவது வழக்கம்.
அதேபோல் நாளை அக்டோபர் 22 பிறந்த நாள் காணும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி அவர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்டத்தில் வால் போஸ்டர்கள் அடித்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அந்த வால் போஸ்டரில் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் சின்னசாமி புகைப்படம் இடம் பெறவில்லை, அதேபோல் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களின் புகைப்படம் இடம் பெறவில்லை, அதேபோல் மாவட்ட தலைமை நிர்வாகிகள் பெயரோ படமோ இடம்பெறவில்லை.
சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் புகைப்படமும், முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் படமும் இடம்பெற்றுள்ளது.
பாஜக மாநிலத் தலைவராக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை அவர்களை நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதே கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் பெயரும் நீண்டநாட்களாக பரிந்துரையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கரூரில் காங்கிரஸ் கட்சியிலும் கோஷ்டி பூசல் உருவாக்கி இருப்பதாகவே இந்த வால் போஸ்டர் மூலம் தெளிவாக தெரிகிறது.
ஆண்டுதோறும் கே எஸ் அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு இவர்கள் மட்டுமே பிறந்தநாள் வாழ்த்து மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை குறித்து சுவரொட்டிகளை ஒட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தும் அவர்கள் செய்யாத செயல்களை நாங்கள் எடுத்து செய்வதாக சில முன்னாள் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதங்கத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு ஒருபடி மேலாக எங்களை சரிவர மதிப்பதில்லை. ஆகவே , தான் நாங்கள் எங்களது பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
மாநிலம், தேசியம் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பணிகளை மேற்கொண்டு வரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை அவரது சொந்த மாவட்டத்தில் அங்கீகரிக்க கட்சியினர் மறுத்து வருவதையே இது காட்டுகிறது.