புதிதாக கட்சி தொடங்கும் நபர்கள் முதலமைச்சர் நான்தான் என்று பேசி வருகிறார்கள். கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் அதன் பிறகு தெரியும் எவ்வளவு சிரமம் என்று தெரியும் என நடிகர் விஜய் மறைமுகமாக விமர்சனம் - கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு.


 


 




கரூரில் சில நாட்களாக அமைதியாக இருந்த அதிமுக கட்சி தற்போது தனது சட்டமன்றத் தேர்தல் பணியை முன்னிட்டு அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை முதல் கட்டமாக விறுவிறுப்புடன் தொடங்கியுள்ளன. அதிமுக புதிய நிர்வாகிகள் மற்றும்  நிர்வாகிகளுக்கு, உறுப்பினர் (உரிமை சீட்டு) அடையாள அட்டைகளை வழங்கினார். அதிமுக கட்சியின் (உரிமை சீட்டு )அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொகுதி வாரியாக நடைபெற்றது. முதலாவதாக கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கான அதிமுக (உரிமை சீட்டு) அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


அதை தொடர்ந்து குளித்தலை பகுதியில் அதிமுக நிர்வாகிகளுக்கான உரிமை சீட்டு என்று அழைக்கப்படும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.




அதை தொடர்ந்து மாலை நான்கு மணி அளவில் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அதிமுக புதிய மற்றும் உறுப்பினர்களுக்கு உரிமை சீட்டு என்று அழைக்கப்படும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி 80 அடி சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சின்னச்சாமி கலந்துகொண்டு சிறப்பை ஆற்றினார்.




மேலும் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் உரை ஆற்றினார். இந்த கூட்டம் மாவட்ட தலைவர் திருவிக தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, வார்டு கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பேசும்பொழுது நான் கடந்த 58 ஆண்டுகளாக கற்ற அரசியலை விட கடந்த மூன்று மாதங்களாக நான் கற்ற அரசியல் மிகவும் ஆழமானது என கூறினார். அதை தொடர்ந்து பேசிய அவர் இன்று நடைபெறும் அதிமுக உறுப்பினர்கள் உரிமை சீட்டு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் அடையாள அட்டை ஆகும். ஆகவே அனைத்து அதிமுக நிர்வாகிகளும் வார்டு வாரியாக அதிமுக உறுப்பினர்களுக்கு இந்த அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.



 


மேலும் இந்த அரசு இன்னும் 18 அமாவாசை மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் அதை தொடர்ந்து மீண்டும் அதிமுக அரசு அமையும் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக இது உறுதி என சூளுரைத்தார் அதை தொடர்ந்து பேசியபோது  புதிதாக கட்சி தொடங்கும் நபர்கள் முதலமைச்சர் நான் தான் என்று பேசி வருகிறார்கள் கட்சி தொடங்கி தேர்தலை சந்தித்தால் அதன் பிறகு தெரியும் எவ்வளவு சிரமம் என்று தெரியும் என நடிகர் விஜய் மறைமுகமாக குற்றம் சாட்டினார். ஏற்கெனவே ஒரு நடிகர் கமலஹாசன் காந்தி பேரன் போல பேசிவிட்டு தற்பொழுது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளார். அண்ணா திமுகவை அழிப்பதற்கு எந்த கொம்பனும் கிடையாது அம்மாவின் இறப்புக்கு பிறகு கட்சியை சிறப்பாக அம்மாவின் வழியில் நடத்தி வருகிறோம். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது எங்கு பார்த்தாலும் கஞ்சா, கொலை, கொள்ளை என்று தினந்தோறும் அரங்கேற்றி வருகிறது என்றார்


 




இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகளான மல்லிகா சுப்புராயன், சிவசாமி கமலக்கண்ணன் தங்கவேல் தானேஷ் முத்துக்குமார் என் எஸ் கிருஷ்ணன் நெடுஞ்செழியன் பாலமுருகன் மற்றும் எம்ஜிஆர் மன்றம் இளைஞர் அணி பேரவைகள் மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகளும் கரூர் மேற்கு நகரம் தெற்கு நகரம் வடக்கு நகரம் கிழக்கு நகரம் என நகர செயலாளர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.