ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60வது குருபூஜை (நாளை) அக்டோபர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

தேவர் ஜெயந்தி:


பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த தேதியும், இறந்த தேதியும் அக்டோபர் 30-ஆம் தேதியாகும். எனவே, சுதந்திர போராட்டம் உள்ளிட்ட சேவைகளை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 


தேவரின் ஆன்மீக வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாலயத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.




பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். இது போன்று மேலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய தலைவரின் 115-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது.


உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு:

 

இதனை அடுத்து முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு முதலமைச்சர், அமைச்சர்கள், சமுதாய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வர உள்ளனர்.

இந்நிலையில் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முக்கிய அமைச்சர்களான துரைமுருகன் மற்றும் கே.என்.நேரு உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாக பங்கேற்கவில்லை என கூறப்பட்டு வந்த நிலையில், திமுகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பாதுகாப்பு தீவிரம்


ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 9ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் குருபூஜை நடைபெறுவதால் நவம்பர் 9 ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகின்ற நவம்பர் 9 ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசும்பொன் தேவர் குருபூஜை நடைபெறுவதால் நவம்பர் 9 ம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.


இந்நிலையில் பத்தாயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 13 ட்ரோன் கேமிரா மூலம் தேவர் குருபூஜைக்கு வரக்கூடியவர்களை கண்காணிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்ததோடு வரக்கூடிய பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்றி வர வேண்டும், வாகனங்களின் மேற்கூரையில் பயணம் செய்து வரக்கூடாது என தென்மண்டல ஐ.ஜி தெரிவித்தார்.


இந்நிலையில் நாளை தேவர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, மதுரை மாநகரில்  போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.  லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10.30மணி வரை நகருக்குள் கோரிப்பாளையம் தேவர் சிலை நோக்கி நுழைய தடை செய்யப்படுகிறது. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் சாலைகளில் செல்வதற்கு அனுமதி இல்லை.


Also Read: Thevar Guru poojai : தேவர் நினைவிடத்தில் ”இபிஎஸ் வாழ்க” கோஷத்திற்கு எதிர்ப்பால் சலசலப்பு