தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக  செங்கல்பட்டு  தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கஜா என்கிற கஜேந்திரன் தலைமையில், நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராஜேந்திரன் கலந்து கொண்டு நேற்று பிறந்த 31-குழந்தைகளுக்கு மோதிரம் மற்றும் குழந்தைகள் பரிசு பெட்டகம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்‌ ராமச்சந்திரன்,  மகளிர் அணி இணைச் செயலாளர் கணிதா சம்பத், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 



 

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாளை ஒட்டி காஞ்சியில் கோவிலில் 101 தேங்காய் உடைத்து நேர்த்திகடன்

 

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்தநாளை ஒட்டி நலம் பெற வேண்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வி சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் முருகன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வழக்கத்தீஸ்வரர் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் அதிகாலையில் இருந்து சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெற்றன.  

 



 

இதனைத் தொடர்ந்து தேரடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச ஆஞ்சநேயர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி நலம்பெற வேண்டி 101 தேங்காய் உடைத்து நேத்து கடன் செலுத்தினர். மேலும் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் 20 கிலோ கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு நலத்த உதவிகளும், அன்னதானமும் வழங்கினர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொழுது கூட்டம் அலைமோதி முந்திக்கொண்டு ஒருவர் ஒருவர் முந்தி அடித்துக் கொண்டு நல்ல திட்ட உதவிகளை அள்ளி சென்றனர். கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் நலத்திட்ட உதவிகளை தூக்கி போட்டு அங்கிருந்து சென்றனர்.