கலைஞர் நூற்றாண்டு சிலை திறப்பு விழா
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஞ்சிபுரம் பொன்னேரி கரையில் உள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுத் தூண் வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு சிலை திறப்பு விழா என்று நடைபெற்றது.
அண்ணாமலை மீது விமர்சனம்
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான டி ஆர் பாலு பேசுகையில், சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலை செய்தியாளரை சந்தித்த பொழுது பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி உங்களை சந்தித்தாரா என கேள்வி எழுப்புகிறார். யார் சொன்னது ? யார் சொன்னது ? என பேசுகிறார். பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டால், உண்டு அல்லது இல்லை என்று சொல்லிவிட்டு சென்றிருக்கலாம்.
அவர்களிடம் ஆதாரங்கள் கேட்கக் கூடாது, அடிப்படை விஷயங்கள் கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை.
பொது வாழ்வில் உள்ள மனிதர்
உனக்கு யார் சொன்னது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெயரை கூறுகிறார். அவர் சொன்னாரா. அவர் கூட பரவாயில்லை , அவர் கட்சியின் தலைவர், அவரைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். அவர் பொது வாழ்வில் உள்ள மனிதர் என்பதால் அனைவருக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவர். ஆனால் என்னுடைய அன்பு சகோதரி துர்கா ஸ்டாலின், பொது வாழ்வு சம்பந்தப்பட்ட மனிதர் அல்ல, அவர்கள் அரசியலில் இல்லை. ‘துர்கா ஸ்டாலின் அவர்கள் இவ்வாறு கேள்வி கேட்க சொன்னாரா?’ என அண்ணாமலை பேசுகிறார்.
ரத்தம் எல்லாம் கொதிக்கிறது, ரத்தம் சூடாகிறது
”மோடிக்கு தெரிந்தால் கூட அவரை சும்மா விட மாட்டார். ஒரு கட்சியின் தலைவர் இப்படி பேசலாமா. குடும்ப தலைவியாகத்தான் துர்கா ஸ்டாலின் இருக்கிறார். நான் சாதாரண ஆளாக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் பேசுவேன்.. பேசவும் முடியும். கட்சியில் நிறைய பதவிகள் கொடுத்து சற்று உயரம் போய்விட்டேன். எதை வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமானாலும் என்னால் பேச முடியவில்லை.. என்னுடைய ரத்தம் எல்லாம் கொதிக்கிறது, ரத்தம் சூடாகிறது. இதற்கெல்லாம் 2024 தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இந்த சிலை திறப்பு விழாவில் , மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்.எல்.ஏ, திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.