விஷ்வ இந்து பரிஷத் முன்னாள் தேசிய தலைவர் வேதாந்தம் ஜி 90 ஆவது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்தில் காஞ்சிபுரம் காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது விழாவில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, 2024 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் விரும்பினால் மம்தா பேனர்ஜி கூட்டு சேர்ந்து போட்டியிட தயார் என அறிவித்துள்ளது குறித்து கேட்ட கேள்விக்கு, பூஜ்ஜிய தோடு எது சேர்ந்தாலும் மாற்றம் வரப்போவதில்லை. இன்றைக்கு ஆம் ஆத்மி கட்சி கூட ஒன்று சொல்லிக் கொள்ளலாம் நீயும் இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறாய், நாங்களும் இரண்டு மாநிலங்களில் ஆட்சிக்கு உள்ளோம் என்றார்.
மாநில கட்சிகளை விட பலவீனமான சக்தியாக காங்கிரஸ் மாறிவிட்டது இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்,நாடு முழுவதும் காங்கிரஸ் இப்படி மாறவேண்டும் என்பதற்கு, தமிழகத்தில் கே.எஸ் அழகிரி மாதிரியான ஆட்கள் என்ன சொன்னார், சனாதன இந்து தர்மத்தை வேரருப்பதற்காக திருமாவளவனோடு கூட்டு வைத்துக் கொள்வேன் என சொன்னார். சமீபத்தில் நான் கூட அதை என்னுடைய ட்விட்டரில் போட்டேன், போட்டவுடன் இதை ராஜா வந்து வீடு வீடாக சொல்வாரா என கேட்டார். இதை சொன்னோம் உத்தரகாண்டில் இருந்த அடிப்படையும் போய்விட்டது.
உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இல்லை என்ற நிலை ஆகிவிட்டது.
அதனால் பெரும்பான்மை சமூதாய எதிர்ப்பு அரசியல்,இந்து விரோத அரசியல், இந்த மாதிரியான அரசியலை தேசியக்கட்சி கையாள முடியாது என்பதை ஐந்து மாநில தேர்தல் நிரூபித்துக் காட்டி உள்ளது. இத்தாலிய சோனியா தலைமையிலான காங்கிரஸ் முழுக்க முழுக்க நாடு முழுவதும் இந்து விரோத கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள் என்பதற்கு கே.எஸ். அழகிரி உதாரணம். வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.
சனாதன இந்து தர்மத்தை வேரறுக்க என்ற வார்த்தை கே.எஸ். அழகிரி பயன்படுத்தினார் அதனால் காங்கிரஸ் கட்சியை மக்கள் வேர் அறுத்து விட்டார்கள். மம்தா பேனர்ஜி, காங்கிரஸுடன் சேர்ந்தாலும் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. திராவிட மாடல் என்பது திருமணம் கடந்த உறவா கருப்புச் சட்டைக்காரர்களுக்கெல்லாம், சுப வீரபாண்டியன் மாதிரி யான ஆட்களுக்கு, எனக்கு ரொம்ப அவமானம் அவர் எங்கள் ஊரை சேர்ந்த ஆள் என்பது. திருமணம் கடந்த உறவுதான் திராவிடன் மாடல் ஒழுக்கமாக இருப்பது நேஷனல் மாடல். என எச்.ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்