மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மிர்ஸா முண்டா ஜெயந்தி:


இச்சூழலில், ஜார்க்கண்ட்டில் நேற்று (நவம்பர் 15) போராளி மிர்ஸா முண்டா ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் திடீரென பிரதமர் மோடி சென்ற கார் முன்பாக நின்றார்.


இதனை சற்றும் எதிர்பார்க்காத பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை பிடித்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தில் பிரதமர் மோடியின் கார் பயணம் சிறிது நேரம் தடைப்பட்டது. அதன்பிறகு மோடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில்  இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 2 கான்ஸ்டபிள்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று தெரியவந்தது.


3 பேர் சஸ்பெண்ட்:


இதனை அடுத்து பிரதமரின் பாதுகாப்பு பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவர்கள் மூன்று பேரையும் ராஞ்சி எஸ்.பி. சந்தன் குமார் சின்ஹா இன்று (நவம்பர் 16) சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


இது தொடர்பாக பேசிய அவர், அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் சங்கீதா என்று தெரியவந்தது. அவர் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ள ஜமுனி கிராமத்தில் 2012 ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்ததாகவும். ஆனால், அவர்களுக்கிடையே 2016 இல் தகராறு தொடங்கியதாகவும் தெரிவித்தார். மேலும் கணவரின் சம்பளத்தை தன்னுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்று அந்தப் பெண் விரும்பியிருக்கிறார்.


இது தொடர்பாக அவர் கடந்த மாதம் அக்டோபரில் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து 10 நாட்கள் அங்கேயே தங்கி அவரை சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளார். பிறகு குடியரசுத்தலைவரை சந்திக்க முயற்சி செய்துள்ளார். அவரையும் சந்திக்க இயலாத காரணத்தால் தியோகரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்.


பழங்குடியினரின் அடையாளமான பிர்சா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் வருவதாக அறிந்து இங்கு வந்திருக்கிறார். இந்நிலையில் தான் பிரதமரின் காரை மறித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.


இந்த விசாரணையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் 2 கான்ஸ்டபிள்களின் கவனக்குறைவுதான் காரணம் என்று தெரியவந்ததை அடித்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என்று சந்தன் குமார் சின்ஹா கூறியுள்ளார்.