ஜெயலலிதா முதல்வராகவும், அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்த போது, அவருக்கு எல்லாமுமாக இருந்தவர்களில் ஒருவர் அவரது நேரடி உதவியாளரான பூங்குன்றன். ஜெயலலிதாவின் உத்தரவுகளையும், எண்ணங்களையும் பிறப்பிப்பதில் பூங்குன்றனுக்கு முக்கிய பங்கு இருந்தது. அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும், பூங்குன்றனின் பெயர் அடிபடாத இடமே இல்லை என்றும் கூறலாம்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முற்றிலும் ஓரங்கட்டப்பட்ட அல்லது ஒதுங்கிக் கொள்ளப்பட்ட பூங்குன்றன், தனது கிராமத்திற்கு சென்று அங்கு விவசாயம் செய்தும் ஆன்மீக பணி செய்தும் காலம் கடத்தி வருகிறார். பரபரப்பாக இயங்கிய அவர், ஆன்மிகம், சமையல், அறிவுரை என பேஸ்புக்கில் ஆக்டிவாக இருந்தும் வருகிறார். ஜெயலலிதா மரணத்திற்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, சசிகலா-இபிஎஸ்-ஓபிஎஸ் மனகசப்பு என அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகளுக்கு எல்லாம், முக்கியமான பதிவுகளை அவர் இடுவது வழக்கம்.

குறிப்பாக, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது அவரது ஆவல். பெரும்பாலும் அவரது பதிவில் அது தென்படும். தியாகத் தலைவி என்கிற அடைமொழியை சசிகலா பயன்படுத்திய போது, ‛தியாகம்’ என்கிற வார்த்தையை பயன்படுத்தினால், அது கட்சியில் அவர் தேடும் பொறுப்பை தியாகம் செய்ய நேரிடும் என்பது போன்ற கருத்தை பூங்குன்றன் பதிவிட்டார். அதை தொடர்ந்து உடனடியாக சசிகலா தனது அடைமொழியை புரட்சித் தாய் என்று மாற்றினார். 

இந்நிலையில் தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடந்து முடிந்து, புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் மற்றம் இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அது தொடர்பாக பூங்குன்றன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில்

சத்தியத்தை நீ காத்திருந்தால்
சத்தியம் உங்களை காத்திருக்கும்
பேருக்கு வாழ்வது
வாழ்க்கை இல்லை
ஊருக்கு வாழ்வதில்
தோல்வி இல்லை
நேர்மை அது மாறாமல்
தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள்..!
 
என்கிற அந்த பதிவு, படிக்காதவன் படத்தில் வரும் பாடலின் வரிகளாகும். இந்த வரிகளை அவர் பயன்படுத்தியது ஏன் என்பது தெரியவில்லை என்றாலும், வாழ்த்தும் இருக்கிறது... வரிகளில் ஒருவித அர்த்தமும் இருப்பதை உணர முடிகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண