ஓ.பன்னீர் செல்வம் குறித்து பேசுவதை ஜெயக்குமார் இதோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என கோவை செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கோவை செல்வராஜ் “ஓ.பன்னீர்செல்வத்தை பற்றி பேச ஜெயக்குமாருக்கு தகுதி இல்லை. தொடர்ந்து இவ்வாறு பேசி வந்தால் அவருக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும். 11 ஆம் தேதி நடக்க இருப்பது பொதுக்குழு அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு துதிபாடும் குழுவை நடத்ததான் திட்டமிடுகிறார். தன்னிச்சையாக யாரும் பொதுக்குழுவை கூட்ட முடியாது.


 






எந்த கையெழுத்தும் இல்லாமல் வந்த அழைப்பிதழ் போலியோ என சந்தேகம் உள்ளது. பழனிசாமி தரப்புக்கு அதிமுக பற்றியும் இரட்டை இலை சின்னம் பற்றியும் கவலை இல்லை. அதிமுகவில் நடக்கும் சதிக்கும் துரோகத்துக்கும் எடப்பாடி பழனிசாமியே காரணம்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஓபிஎஸ் தரப்பு, பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரித்த நீதிபதிகள் பொதுக்குழு நடத்த தடை இல்லை என தீர்ப்பளித்தனர். 


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண