விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா திண்டிவனம் அடுத்த முருக்கேரியில் தொண்டர்கள் சந்தித்த சசிகலாவுக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர் சந்திப்பில் சசிகலா கூறியதாவது :- அதிமுகவில் தற்போது நடக்கக்கூடிய ஒற்றை தலைமை விவரங்கள் அனைத்தையும்  பொதுமக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக பொது மக்கள் நீதி, நேர்மை ஆகியவற்றிற்கு பேர் போனவர்கள் அதனால், இந்த விவகாரத்தில் மக்கள் எப்பொழுது செய்ய வேண்டுமோ இப்பொழுது சரியாக செய்வார்கள்.




மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சசிகலாவின் அரசியல் பயணத்தை கிண்டல் செய்யும் விதமாக பெட்ரோல் விற்கின்ற விலைவாசிக்கு பிரச்சார பயணம் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜெயக்குமார் போன்றவர்களுக்கு நான் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை, இதற்கு பொதுமக்கள் விரைவில் அதற்கான பதிலை அளிப்பார்கள் என தெரிவித்தார்.


நேற்று ஒன்று, இன்று ஒன்று பேசாமல் உண்மையை பேசும் தலைமையை தமிழக மக்கள் விரும்புகிறார்கள் அதன் பக்கம் நிற்கிறேன், அவ்வாறு ஒரு தலைமை இருந்தால்தான் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய முடியும் எனவும், அதிமுக என்பது தனி கம்பெனியயோ, தனி இயக்கமோ கிடையாது அது தொடர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அந்த இயக்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தார்கள் ஆதலால் நான் மக்கள் வழியில் சென்று மக்களுக்கு அந்த திட்டங்களை வழங்குவேன் எனவும் தெரிவித்தார்,






கொடநாடு கொலை வழக்கு :


கொடநாடு கொலை வழக்கு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வு குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது தெருத்தெருவாக சென்று விரைவில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார், ஆனால் தற்போது வரை விசாரணை செய்யாமல் உள்ளது என் என கேள்வி எழுப்பினார், அதிமுகவில் இருக்கும் நான் ஏன் அமமுகவில் இணைய வேண்டும், அதிமுகவின் பொது செயலாளர் நான் தான் விரைவில் தொண்டர்கள் படையோடு அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என தெரிவித்தார்.