“முதல்வர் மு.க.ஸ்டாலின் - அண்ணாமலை சந்திப்பால் தி.மு.க., கூட்டணியில் எதுவும் நடக்கலாம். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.கவை சேர்ப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” காலையில் எழுந்து டீ, காபி குடிக்காமல் விஸ்கி, பிராந்தி குடிக்க வேண்டிய நிலைக்கு தமிழக மக்களை குடிகாரர்களாக ஆக்குகிறது ஸ்டாலின் அரசு. அ.தி.மு.கவை வலிமையாக கொண்டு செல்கிறார் எடப்பாடி பழனிசாமி.
நாடாளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெல்லும். அ.தி.மு.க., ஒரு வித்தியாசமான இயக்கம். யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் பரிசீலிக்க கூடிய இடத்தில் அ.தி.மு.க., உள்ளது. பிரிந்து சென்றவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வந்து மீண்டும் சேர்ந்த வரலாறு அ.தி.மு.கவுக்கு உண்டு. ஓ.பி.எஸ். அணியில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் கூட அப்படி வந்தவர் தான்.
தமிழகத்தில் 2.25 கோடி குடும்ப மகளிருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் எந்த குடும்ப தலைவியும் ஓட்டு போட மாட்டார்கள். துக்ளக் தர்பார் ஆட்சியில் மக்கள் கடும் அவதியில் உள்ளனர்" என்றார்.
முதலமைச்சர் - அண்ணாமலை சந்திப்பு திட்டம் குறித்த கேள்விக்கு, "யாரு கண்டா... திமுகவில் எதுவும் நிரந்தரம் கிடையாது. ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தொடருமா எனவும் தெரியாது" என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க பாமகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதே, பாமக இன்னும் கூட்டணியில் உள்ளதா என்ற கேள்விக்கு, "அவர்கள் கூட்டணியில் இருக்கிறார்களா என தெரியவில்லை. தேர்தல் நேரத்தில் தான் அது உறுதி செய்யப்படும்" என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: 7-ம்வகுப்பு மாணவன் உயிரிழப்பு: அதிகாரிகள் மெத்தனம் காரணமா?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kalaignar Womens Assistance Scheme: வந்தது அறிவிப்பு! மகளிர் உரிமைத் தொகைக்கு இது கட்டாயம்... தமிழ்நாடு அரசு சொல்றத கேளுங்க!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்