"பாஜகவின் தலித் சகோதரர் கமலேஷ் பஸ்வானை பேச அனுமதிக்கிறேன்", என்று கூறிய ராகுல் காந்தியிடம் அவை தலைவர் ஓம் பிர்லா கோபமாக பேசியுள்ளார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தரப்பில் இருந்து முதலில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வீடியோவில் சுமார் 25 நிமிடங்களில், மோடியை கடுமையாக விமர்சித்தார். இந்த பேச்சின் இடையே, "இந்த மன்னர் யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்பதில்லை. ஏன் அவர் கட்சியினர் சொல்வதயே கூட கேட்பதில்லை, அவர் தலித் மக்களின் பிரதிநிதியாக பாஜகவின் கமலேஷ் பஸ்வான் பேசும்போது கூட பார்த்திருக்கலாம். அவருக்கு தலித் வரலாறு தெரியும், 3000 வருடங்களாக யார் ஒடுக்கியது என்று தெரியும். ஆனால் அவர் தயக்கத்துடன் பேசுகிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த மனிதரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவர் மனதில் உள்ளதை பேசியிருக்கிறார், ஆனால் அவர் தவறான கட்சியில் இருக்கிறார். கவலைப்படாதே சகோதரா பீதி அடைய வேண்டாம்", என்று பேசிக்கொண்டிருந்தார்.

Continues below advertisement

கமலேஷ் பஸ்வான் பேசுவதற்காக கையை உயர்த்தினார், அதற்கு அவை தலைவர் ஓம் பிர்லா, 'குறுக்கிட வேண்டாம், பேசி முடிக்கட்டும்' என்று அவரை அனுமதிக்கவில்லை. அப்போது ராகுல் காந்தி, "இது ஜனநாயக இந்தியா, நான் எல்லோர் பேசுவதையும் அனுமதிப்பேன், அவர் பேசட்டும்" என்று மோடியை மறைமுகமாக தாக்கி கூறினார். அதற்கு அவை தலைவர் ஓம் பிர்லா, "இங்கு அனுமதி அளிக்க வேண்டியது அவை தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் இல்லை" என்று கோபமாக பேசினார். மோடி யார் பேசுவதையும் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அவர் பேசுவதற்கு கை உயர்த்தியதால், 'நான் எல்லோர் பேசுவதையும் கேட்பேன்' என்று உறுதி படுத்துவதற்காக ராகுல் காந்தி அப்படி பேசியிருக்கிறார், ஆனால் அவரது வார்த்தைகளை கேட்டு அவை தலைவர் கோபடைந்துள்ளார்.

Continues below advertisement

தமிழகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராகுல் காந்தி, ''நீட் தேர்வு விலக்கு வேண்டும் என தமிழகம் உங்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. தமிழகத்தின் கோரிக்கைகள் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லை. தமிழகம் மீண்டும் மீண்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைக்கும். நீங்கள் மறுத்து அவர்களை வெளியேற்றுகிறீர்கள்'' என்று குற்றம் சாட்டினார். உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஒரு போதும் நீங்கள் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது'' என்றும் ராகுல் காந்தி அனல் பறக்க பேசினார். ராகுல் காந்தியின் இந்த பேச்சுதான் இப்போது இணையத்தில் ஹாட் டாபிக்காக உள்ளது. ராகுல் காந்திக்கு ஆதரவாக தேசிய அளவில் டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. பல்வேறு தரப்பினரும் ராகுல் காந்தியை பாராட்டி வருகின்றனர். இதேபோல் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக ராகுல் காந்தி குரல் கொடுத்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நன்றி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் புரட்சிகரமான பேச்சுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின் கருத்தை அழுத்தமான முறையில் வெளிப்படுத்திய புரட்சிகரமான பேச்சுக்கு நன்றி. சுயமரியாதை மதிக்கும் தமிழர்களின் நீண்டகால வாதங்களுக்கு நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீரகள்'' என்று கூறி இருந்தார். அதற்கு ராகுல் காந்தி தமிழில் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.