அதிமுக குறித்து சி.டி. ரவி கூறியது பாஜகவின் கருத்து தானே தவிரே முடிவு உங்களுடையது என தமிழ்நாடு பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ட்வீட் செய்துள்ளார். 


இன்று அ.தி.மு.க.வின் இரு அணியின் தலைவர்களாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்த பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் அதிமுக இணைய வேண்டும் என கூறியதாக செய்தியாளார்களிடம் கூறினர்.


இதற்கு பதில் அளிக்கும் வகையில், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் செய்தி தொலைக்காட்சியில் கூறியதாவது, அதிமுக என்ன செய்ய வேண்டும் என்பதை பா.ஜ.க. கூறக்கூடாது. பாஜக தேசிய அளவில் பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் தான் பாஜக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முடிவு எடுப்பார். பாஜக எங்களுக்கு கட்சி எப்படி நடத்த வேண்டும் என சொல்ல அதிகாரமும் இல்லை, தேவையும் இல்லை என கூறினார். மேலும், கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா? 






 அதேபோல், மற்றொரு ட்வீட்டில், அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பிரிவின் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் தி.மு.க.வை எதிர்த்து ஒரு தேர்தலில் கூட வெல்லாத பா.ஜ.க. திமுகவை எப்படி வீழ்த்த வேண்டும் என எங்களுக்கு சொல்லித் தரவேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளார். 






இதற்கு பதில் அளிக்கும் வகையில்,  தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ட்வீட் செய்துள்ளார். அதில், எல்லாம் தெரியும் என்றால் பின்னர் எதற்காக 2017லில் டெல்லி வழிகாட்டுதல் படி இணைந்தீர்கள், அன்று அது நடக்கவில்லை என்றால் இன்று உங்கள் கட்சி யாரிடம் இருந்திருக்கும்?  சி.டி. ரவி கூறியது எங்களுடைய கருத்து தானே தவிர முடிவெடுக்க உங்களுக்கு உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 


அதிமுக பாஜகவிடையே ட்விட்டரில் நடக்கும் இந்த வார்த்தை போர் அதிமுக - பாஜக கூட்டணி முறிவை அறிவிக்க இரு தரப்பும் தயாராகிவிட்டதா? எனவும் கேள்வியை எழுப்புகிறது.