செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையில் உள்ள ஐஐஐடிடிஎம் காஞ்சிபுரம் (இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தியை நிறுவனம்) நடைபெற்ற பத்தாவது பட்டமளிப்பு விழாவில் 380 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர் இதில் ஆறு பேர் பிஎச்டி 53 பேர் எம்டெக் 110 பேர் இரட்டை பட்டம் 217 பேர் பட்டங்களை பெற்றுக்கொண்டனர். இக்கல்வி நிறுவனத்தில் ஆடிட்டோரியத்திற்கு  நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார், ஏ ஐ, ஐஓடி ரோபோடிக்ஸ் மையத்தை திறந்து வைத்தார். முந்தைய பட்டமளிப்பு விழாக்களில் தங்கப் பதக்கம் வென்றவர்களை உள்ளடக்கிய மாணவர்களை கௌரவிக்கும் சுவரையும் அவர் திறந்து வைத்தார்.



மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மாணவர்களிடையே பேசுகையில், உலகம் எங்கும் முன்னேறுகிறது அனைத்து நாடுகளும் தொழில்நுட்பம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. எனவே இதைப் பெற்றோர்கள் அறிந்துகொள்ள வேண்டும் கல்விக்காக பெற்றோர்கள் தங்கள் வருமானத்தை , ஒரு பகுதி சேமிக்க வேண்டும் எனவும் 2028-ஆம் ஆண்டில் பயனாளிகளின் எண்ணிக்கை, சீனாவை விட இந்தியா அதிகரிக்கும் எனவும் , மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையால் உயர் கல்விக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.



மேலும் இன் நிகழ்ச்சியில் ஐஐஐடிடிஎம் இயக்குனர் டிவிஎல்எம் சோமயாஜுலு  மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். ஐஐஐடிடிஎம் நிறுவன குழு தலைவர் பேராசிரியர் எஸ் சடகோபன் மற்றும் ஐஐஐடிடிஎம் இயக்குனர் டி வி எல் எம் சோமயாஜுலு மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.



 

தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், முதல் 500 நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கு அடுத்து இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பணியாளர்கள் எண்ணிக்கை உயர்வு இந்தியாவின் பலமாக இருக்கும் என ஐ.நா.புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2047-இல் விஞ்ஞானம், தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டுவர வேண்டும்.



 

தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப மாணவர்களின் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். உற்பத்தி நிறுவனங்களின் தேசமாக இந்தியா மாற வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அனைவரின் உழைப்பு, பணி இருக்க வேண்டும், என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

 


Neet Suicide : பிலிப்பைன்ஸில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்.. நீட் தேர்வில் தோல்வி.. திருவள்ளூர் மாணவி தற்கொலை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர