Ghulam Nabi Azad: இன்னும் பத்து தினக்களில் புதிய கட்சி குறித்த அறிவிப்புகள் அறிவிக்கப்படும் என ஜம்மு காஷ்மீரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கங்கிரஸில் இருந்து விலகியவரும், முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். 


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்து, விலகினார்.  2014ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்த பிறகு மாநிலங்களிலும் தங்களது ஆட்சியை வலுப்படுத்த தொடங்கியது. இதனால், காங்கிரஸ் கட்சியின் பலம் மாநிலங்களில் மிகவும் குறைந்தது. மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்திக்க தலைமை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 2014ல் இருந்து உங்களின் தலைமையிலும், அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் தலைமையிலும் காங்கிரஸ் இரண்டு மக்களவைத் தேர்தல்களில் அவமானகரமான முறையில் தோல்வியடைந்துள்ளது. 2014 - 2022க்கு இடையில் நடைபெற்ற 49 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 39ல் தோல்வியடைந்துள்ளது. 


நான்கு மாநிலத் தேர்தல்களில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்று ஆறு நிகழ்வுகளில் கூட்டணியில் ஆட்சிக்கு வர முடிந்தது. துரதிர்ஷ்டவசமாக, இன்று காங்கிரஸ் இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. மேலும் இரண்டு மாநிலங்களில் ஆளும் கூட்டணியின் ஓர் அங்கமாக உள்ளது என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டது. 


காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய  குலாம் நபி ஆசாத், ராகுல்காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையாலே 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல்காந்தியால் அல்லது அவரது உதவியாளரால் மட்டுமே எடுக்கப்படுகிறது என்றும், சோனியாகாந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக உள்ளார் என்றும் சரமாரியாக குற்றம் சாட்டியிருந்தார். 






 மேலும்,  நான் மோடி ஒரு முரட்டுத்தனமான மனிதராக இருப்பாரோ என்று நினைத்தேன். அவருக்கு மனைவியோ குழந்தைகளோ இல்லாததால், கவலைப்பட மாட்டார் என்று நினைத்தேன். ஆனால், குறைந்த பட்சம், அவர் மனிதாபிமானத்தைக் காட்டினார் குலாம் நபி ஆசாத் கூறியிருந்த நிலையில், பாஜகவில் இணையப்போகிறார் என அனைவரும் கூறிவந்த நிலையில், நான் பாஜகவில் இணையப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.


மேலும், புதிய கட்சி தொடங்கவுள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில்,  இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் இன்னும் பத்து நாட்களில் புதிய கட்சி குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலை மனதில் வைத்து தான், காங்கிரஸில்ல் இருந்து விலகி புதிய கட்சியை குலாம் நபி ஆசாத் தொடங்கவுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் கட்சியை விட குலாம் நபி ஆசாத்திற்கு ஜம்மு காஷ்மீர் மக்களிடத்தில் தனி அங்கீகாரம் இருப்பதால் ஜம்மு காஷ்மீரை கைப்பற்ற, காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் அரசியல் சதுரங்கம் எனவும் கூறப்படுகிறது.