மதுரை விமான நிலையம் அருகே அவனியாபுரத்தில் நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறுகையில்,” ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட எதிர்க்கட்சிகள் கண்ணுக்கட்டும் தூரம் வரை தெரியவில்லை என கே.எஸ்.அழகிரி கூறியதற்கு அப்போது அவருக்கு கண்ணு தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இடைத்தேர்தலில் யாரையும் தோற்கடிப்பதற்காக போட்டியிடவில்லை நாங்கள் வெல்வதற்காக தான் போட்டியிடுகிறோம். கமல்ஹாசன் காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்வது அவரது முடிவு நான் தனித்து தான் போட்டியிடுவேன்.
திருப்பூர் பகுதியில் வட மாநிலத்தார் தமிழர்களை தாக்குவான் என்பது ரொம்ப நாளாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இது தொடக்கம் தான். வட இந்தியர்களை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது இந்தியை ஆதரிப்பதற்கு என ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் பா.ஜ.க., வாக்காளர்கள் எனவே அதனை ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. இது புதுசல்ல இது தொடர்ந்து நடக்கும். எங்களைப் பொறுத்தவரை ஆளுநர் பதவி அவசியம் இல்லை. இவரை அடுத்து மற்றொருவர் வந்தாலும் அதேதான் நடக்கப் போகிறது. மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருவர் தடுக்கிறார் என்றால் அது ஜனநாயக துரோகம்.
அ.தி.மு.க., என்ற கட்சி இல்லை என்றால் என்ன ஆகப்போகிறது, இருந்து என்ன நடக்கப் போகிறது. இந்திய ஒன்றிய கட்சிகளுக்கு மாற்று தான் நாங்கள் தான். பாஜக வளராது. அப்படி வளர்கிறது என்றால், என்னை மாதிரி தனியாக நிக்க வேண்டியது தானே. நாங்கள் வளர்கிறோம் என ஊடகங்களுக்கு மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றனர் பாஜகவினர். தமிழ்நாட்டிற்கு வானூர்தி நிலையங்கள் தேவையில்லை வானூறுதி தான் தேவை. ஒரு தொகுதி இடைத்தேர்தலில் போது மொத்த நாட்டிற்கும் தேர்தல் நடத்த முடியுமா.? வாஜ்பாய் இருக்கும்போது ஜெயலலிதா கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர்.
ஒருவேளை மத்தியில் பா.ஜ.க., கூட்டணியில் ஆட்சி பெற்றிருந்தால் ஆட்சி கலையும் போது மொத்த நாட்டிற்கும் தேர்தல் நடக்குமா.?ஒரே நாடு ஒரே தேர்தல் இது தெண்ட செலவுக்கு வழிவகுக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் எனது நண்பர் புரோட்டா சூரி கூறுவது போல் மறுபடியும் சாப்பிட ஆரம்பிப்போம் என கூறுவது போல் உள்ளது. நமது முன்னோர்கள் பிழை செய்துள்ளனர் இறை என்னுடையது கோவில் என்னுடையது எனது தாய் மொழியில் வழிபடுவது தான் எனது தார்மீக முறை. 2 கோடி பேர் வட இந்தியர் தமிழகத்திற்குள் வந்துவிட்டனர் அது கண்ணுக்குத் தெரிகிறது. திராவிடர்கள் ஆளும் வரை அந்த பாதுகாப்பு கிடைக்கப் போவதில்லை. தாய் மொழியைப் போல் இருக்கும், எங்க அம்மாவை அம்மா என்று ஒரு தடவை தான் சொல்ல வேண்டும் என கூறுவது எவ்வாறு சாத்தியமாகும். மாநில உரிமைகளை பற்றி பேசாமல் இந்திய ஒற்றுமையைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்