கவர்னர் பதவி விலகி விட்டு போட்டியிட்டு போட்டியில் வெற்றி பெற்ற பிறகு எங்களிடம் வந்து பேசட்டும் எனக் கூறும், இவர்கள் மருத்துவம் பற்றி எதுவுமே தெரியாமல், நீட்டை எதிர்ப்பது நீட்டைப் பற்றி பேசுவது எப்படி? சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி...
செய்தியாளரை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்ததாவது : மரியாதைக்குரிய பாரத பிரதமர் கேஸ் விலை 200 ரூபாயும் , உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பில் உள்ளவர்களுக்கு 400 ரூபாய் குறையும் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கானாவில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ரக்ஷா பந்தன் கயிறு கட்டிவிட்டு, நமது எல்லைகளை பாதுகாக்கும், ராணுவ வீரர்களுடன் சொந்தமாக இருக்க வேண்டும் என்ற செய்தியுடன் வந்திருக்கிறேன். எதை செய்தாலும் விமர்சனங்கள் வரும் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை உடனடியாக எதிர்க்கட்சிகள் தேர்தல் வருவதை காரணம் காட்டித்தான் கேஸ் விலை குறைக்கப்படுகிறது என் கூறியுள்ளனர். மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள் இந்தியா முழுவதும் விடியலை தர காத்திருக்கிறேன் என கூறுகிறார்.
தனது கூட்டணியில் இருக்கும் கர்நாடக அரசுடன் அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நிறைய வாங்கி தர முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நமது மாநிலத்திற்கும் பக்கத்தில் உள்ள மாநிலத்திற்கும் தேவையான காவிரி நீரையே பெற்று தர முடியவில்லை என்றால் இந்தியா முழுவதும் சென்று என்ன சாதிக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. தமிழக முதலமைச்சர் கர்நாடகா முதலமைச்சருக்கு பேசமுடியாதா? ஒரு விடியலை டெல்டா விவசாயிகளுக்கு தர முடியவில்லை என்றால் அது எந்த மாதிரியான விடியல் என்று எனக்கு தெரியவில்லை
மகாராஷ்டிராவிற்கு கூட்டணி ஆட்சி கூட்டத்திற்கு செல்கிறார்கள்.... எப்படி போவார்கள் இந்தி தெரியாது போடா என டீ சர்ட் அணிந்து செல்வார்களா? என கேள்வி எழுப்பினார். எதை செய்தாலும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பது எனது கருத்து, அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறார்கள், பல லட்சம் பேரிடமிருந்து கருத்துக்களை வாங்கி இந்த புதிய கல்விக் கொள்கை நமக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மாணவர்கள் அறிவாளியாக வெளிவருவதை நீங்கள் விரும்பவில்லையா? எனக் கேட்கத்தான் தோன்றுகிறது.
எல்லாவற்றையும் அரசியலாக பார்த்து ஒரு நல்ல விஷயத்தை கூட எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கிறது என்பது எனது கருத்து. மருத்துவ கல்வி வியாபாரமாக கூடாது என்பதற்காகத்தான் நீட் வந்தது. நான் தனியார் மருத்துவ கல்லூரியில் பணியாற்றியுள்ளேன். அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்துள்ளேன். நீட் கல்வி முறையின் மூலம் மருத்துவ கல்வி முற்றிலும் வியாபாரம் ஆக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியின் நடத்துபவர்கள் அவர்களுக்கு தேவையானவர்களை அவர்களுக்கு உறவினர்களை மருத்துவம் படிக்க அனுப்புவார்கள் அவர்கள் குறைந்த அளவு மதிப்பெண்ணுடன் மருத்துவம் பயில வந்து எந்த அளவிற்கு கடினப்படுகிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்தவள். அதனால் தான் நான் நீட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். மருத்துவக் கல்லூரியை பற்றியோ மருத்துவம் பற்றியோ எதுவும் தெரியாமல் அதைப் பற்றி பேசுகின்றனர். கவர்னரை பதவி விலகிக் கொண்டு போட்டியிட வேண்டும் என்று கூறும் இவர்கள் மருத்துவம் பற்றி தெரியாமலேயே நீட் பற்றி பேசுவது எப்படி சரியானதாக இருக்க முடியும். எங்களைப் போன்றவர்கள் மருத்துவ கல்லூரியை பற்றி தெரிந்து கொண்டு நீட்டை பற்றி பேசுங்கள் என்று கூறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்.
ஆகவே எல்லாவற்றையும் அரசியல் ஆக்கி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து என கூறினார்