நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு 4 இடங்களில் வென்றது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக என்னை நிறுத்த முயற்சி நடந்தது என தெரிவித்து இருந்தார். அதற்கு திருமா மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். கடந்த தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் 4 தொகுதிகளில் வென்றது. இந்த நிலையில் திருமாவளவன் கூறிய கருத்துகளை மேற்கோள் காட்டி பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கிண்டல் செய்து ட்வீட் போட்டுள்ளார்.



அவர் போட்டுள்ள ட்வீட்டில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக பாஜக சார்பில் நீங்கள் ஏன் நிற்கவில்லை? திருமாவளவனுக்கு தைரியம் இருந்தால் மெரினா கடற்கரைக்கு வந்து அங்கே இந்துக்களை பற்றி தவறாக பேசட்டும் என சவால் விடுத்திருந்தார். இதையடுத்து அவரது வீட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து திருமாவளவனையும் அவரது கட்சியையும் அவதூறாக பேசியதில் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இந்நிலையில் தனியார் ஊடக பேட்டியில், "திருமாவளவன் கட்டுக் கதைகளை சொல்கிறார் என்ற ரீதியில் நீங்கள் வந்தா நாங்கள் அப்படியே கையெடுத்து கும்பிட்டு ஏற்றுக் கொள்வோமா" என்ற தொனியில் கிண்டலடித்து ட்வீட் போட்டுள்ளார்.






கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரை தொடர்ந்து விசிகவை விமர்சித்து வந்தார். திமுக ஆட்சி அமைந்த பிறகு விசிகவை விட்டுவிட்டு தனது கவனத்தை திமுக பக்கம் திருப்பிய காயத்ரி தற்போது மீண்டும் விசிகவை வம்புக்கு இழுத்துள்ளார். மீண்டும் திருமாவை வம்புக்கு இழுத்த காயத்ரியால் விவாதங்கள் காரசாரமாக போய் கொண்டிருக்கிறது. திருமாவை மட்டுமன்றி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானும் அதே போல ஒரு பேட்டியில் பாஜக முதல்வராக்க முயற்சித்தது என்று கூறியதை கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூபில் வீடியோக்களை காண