அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.  எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான அ.தி.மு.க. எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அவர் கூறியதாவது, “ எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க ஒன்றரை கோடி தொண்டர்களை ஓரணியில் இணைத்து அம்மாவின் கனவை நனவாக்க மக்கள் பணியாற்றுபவர் எடப்பாடி பழனிசாமி. மக்கள் செல்வாக்கு பெற்ற எடப்பாடி பழனிசாமி விளங்க வேண்டும் என்று வழங்கியுள்ள மகத்தான தீர்ப்பு ஜெயலலிதாவின் ஆன்மாவையும், எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.




எடப்பாடி பழனிசாமிக்கு இந்த சத்திய சோதனையில் கிடைத்திருக்கும் வெற்றி மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி. ஜெயலலிதாவின் ஆன்மாவும், எம்.ஜி.ஆரின் ஆன்மாவும் எடப்பாடி பழனிசாமியுடன் என்றைக்கும் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு மூலம் அறிய முடிகிறது.


மேலும் படிக்க : D Jayakumar: “தர்மம் வென்றிருக்கிறது; ஓபிஎஸ்சை நீக்கியது செல்லும்” - ஜெயக்குமார் சரவெடி


ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மலரச் செய்வதற்கான தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பு நியாயத்தின் பக்கமாக, தொண்டர்களின் பக்கமாக, சத்தியத்தின் பக்கமாக அமைந்துள்ளது. 99 சதவீதம் பேர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுள்ளனர். ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி உழைத்துக்கொண்டிருக்கிறார்.




அறிந்தும் அறியாதது போல, தெரிந்தும் தெரியாதது போல இருப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. என்றைக்குமே அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட தயாராக பணியாற்றி வருகிறது. இதுதான் நல்ல நிலை. வெளிப்படையாகவே பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு, எதிர்காலங்கள் ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் பரிந்துரைத்த கருத்துக்களை ஏற்றுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு அடுத்து எடப்பாடி பழனிசாமி. இதுதான் அத்தியாயம். இதுதான் எதிர்காலம்.”


இவ்வாறு அவர் கூறினார்.


சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த தீர்ப்பை ரத்து செய்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் தீர்மானம் செல்லும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்த தீர்மானம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : கட்சியை மீண்டும் கைப்பற்றிய இ.பி.எஸ்..! உச்சநீதிமன்றத்துக்கு ஓடும் ஓ.பி.எஸ்? ஓயாத அதிமுகவின் அலப்பறைகள்!


மேலும் படிக்க : ADMK Case Live : அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக மீண்டும் எடப்பாடி பழனிசாமி