திருவாரூர்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 250 பக்கம் கொடுத்தாலும் 2500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்றுக் காகிதம் தான் என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஆர் காமராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளோடு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலமாக அதிகபட்சம் 50 படிவங்கள் பெற்று வந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் மூலமாக பெற்றால் முறைகேடுகள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே வீடு வீடாக சென்று வழங்கப்படும் வாக்காளர் விபரங்கள் குறித்த பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் மட்டுமே பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறியதாவது.,
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் தயாரிக்கின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அந்தப் பணிகள் முறையாக நடக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கையாக இருக்கிறது. மிக சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் என்பது தேவையான ஒன்றுதான் அதிமுகவின் நிலைப்பாடு அதில் தமிழகத்தில் பொறுத்தவரை சரியாக அதனை கையாள வேண்டும் அதிகாரிகள் அலுவலர்கள் நடுநிலையோடு பணியாற்ற வேண்டும் என அதிமுக கூறுகிறது.
முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு
பூத் லெவல் ஆபீசர், பூத்து லெவல் ஏஜென்ட், பூத் லெவல் ஏஜெண்டாக இருக்கக்கூடியவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை வாங்கி கொடுக்கலாம் என்ற விதி இருப்பதைப் போல தெரிய வருகிறது. இப்படி இருந்தால் முறைகேடு நடப்பதற்கு தான் வாய்ப்பு இருக்கிறது.எல்லா வீடுகளுக்கும் பி.எல்.ஓ செல்ல வேண்டும், பிஎல்ஓ மட்டும் மனுக்களை வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை விண்ணப்பங்களை அவர்களே திரும்ப பெற வேண்டும். யாருக்கும் மொத்தமாக கொடுத்தால் அதில் நிறைய முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
செங்கோட்டையன் 250 பக்கம் கொடுத்தாலும் 2500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்றுக் காகிதம் தான்
ஹரியானா மாநிலத்தில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பிய குறித்த கேள்விக்கு SIR எஸ் ஐ ஆர் என்பது எல்லாரையும் வாக்காளர் ஆக்க வேண்டும் என்பது தான் நோக்கம் இறந்தவர்கள் வெளியூர் சென்றவர்கள். இவர்களெல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான் இதன் முக்கிய நோக்கம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஹரியானா பற்றி சொல்கிறார். பீகார் பற்றி சொல்கிறார். அது வேறு அது அவர் சொல்வது அப்ப திருத்தம் தேவைப்படுகிறது தானே அப்புறம் ஏன் திருத்தத்தை எதிர்க்கிறார். வாக்காளர் பட்டியில் திருத்தம் தேவை என்பது எல்லோருக்கும் வேண்டும் 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு இறந்தவர் பட்டியல்கள் அப்படியே இருக்கிறது. நாங்கள் பலமுறை இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம் ஆனால் அது எடுக்கப்படவில்லை.
ஆனால் இந்த எஸ் ஐ ஆர் உண்மையான வாக்காளர்களை தெரிந்து கொள்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு என சொல்ல வேண்டும். செங்கோட்டையன் 250 பக்கம் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்திருக்கிறார் என்பது பற்றி கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை கொடுத்துவிட்டு நல்ல காரியத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இப்ப போய் நீங்க வந்து செங்கோட்டையன் 250 பக்கம் கொடுத்தாலும் 2500 பக்கம் கொடுத்தாலும் அது வெற்றுக் காகிதம் தான் அதிமுகவில் குடும்ப அரசியல் என்பது இல்லை. 2026 இல் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் அண்ணன் எடப்பாடி தான் முதலமைச்சர் என பேட்டியளித்தார்.