நெருங்கி வரும் தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியினை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தைத் தி.மு.க தொடங்கியுள்ளது. இதை போல அதிமுக சார்பில் 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரம் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு தேர்தலையொட்டி தேர்தல் பணியை துரிதப்படுத்தியுள்ள திமுக, அனைத்து நிர்வாகிகளுக்கும் தினந்தோறும் புதிய, புதிய உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மக்களை சந்தித்து கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள், மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாதவை தொடர்பாக எடுத்துரைக்க அறிவுறுத்தியுள்ளது. 

Continues below advertisement

 தேர்தல் பணியை தீவிரப்படுத்திய திமுக

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது தொகுதி நிலவரம் தொடர்பாக தெரிந்து கொள்ள ஒன் டூ ஒன் சந்திப்பை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வருகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைக்கழக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துகளை கேட்டு வருகிறார். அப்போது தொகுதியில் வெற்றி வாய்ப்பு, கூட்டணி செல்வாக்கு, திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாகவும், நிர்வாகிகளுக்கு இடையிலான மோதல் தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார். 

மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை

அந்த வகையில் இன்று சங்கரன்கோவில், திருநெல்வேலி தொகுதி நிர்வாகிகளைச் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.அப்போது மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றாக வேண்டும், தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்படும் என எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

மேலும் திருநெல்வேலியில் நிர்வாகிகள் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும் என அறிவுறுத்தியவர், அனைவரும் ஒருங்கிணைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கூறியதாகவும், நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளில் திமுக வெற்றி பெறவில்லையென்றால்  நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என நேரடியாக முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுததாக தகவல் வெளியாகியுள்ளது.