முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ள சிவகாசிக்கு மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார் - இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் பேசிய பின், எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: 




திமுக ஆட்சியில் 8 மாத காலம் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில்  முடிவுற்ற திட்டங்களை தொடங்குகிறார்கள். கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி மக்களை ஏமாற்றி திமுக ஆட்சி அமைத்துள்ளது. இந்த அரசுகொள்ளை  அடிப்பதிலேயே பிரதானமாக செய்து வருகிறது.  பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.2500 கொடுத்த அரசு  அதிமுக அரசு. பொங்கல் தொகுப்பினை தரமானதாக வழங்கியது எங்கள் அரசு. அப்போது எங்களை ரூ.5000 கொடுக்க  சொன்ன ஸ்டாலின், இந்த முறை அவர் எதுவும் வழங்கவில்லை. 


மக்களின் வயிற்றில் அடித்த கட்சி திமுக . சர்வாதிகார அரசாங்கத்தை திமுக நடத்துகிறது. அரசு நியாயத்தை இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. எங்கள் கட்சியை உடைக்க அதிமுக நிர்வாகிகள் மீது தேடி தேடி வழக்கு போடுகிறார்கள்.  ராஜேந்திரா பாலாஜி மீது வேண்டுமென்று வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு  பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. எதற்க்கும் நாங்கள் அஞ்ச போவதில்லை. சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுவிட்டது.
ஒரு பொம்மை முதலமைச்சர் ஆட்சி செய்கிறார். 


 மக்கள் பிரச்சனைகளை விட தன் குடும்பத்தை மட்டுமே ஸ்டாலின் பார்க்கிறார். சிவகாசியை மாநகராட்சியாக  அறிவித்தது அதிமுக அரசு. சிவகாசி மாநகராட்சியின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ரூ.100 கோடி ஒதுக்கியது அம்மா அரசு. பள்ளிகளை தரம் உயர்த்தியது, பேருந்து நிலையம் அமைத்து கொடுத்தது , கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்ததும் அம்மா அரசு தான்.  8 லட்சம் தொழிலாளர்களின் நலனை கருதி GST குறைத்தது, பட்டாசு தொழிலாளர்களுக்கு  தீக்காய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தியது, உயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கியது, பட்டாசு  பிரச்சனையை போக்க நடவடிக்கை எடுத்தது அனைத்தும் அம்மா அரசு தான்.


திமுக ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வு ரத்து என்ன ஆனது என மக்கள் கேட்கின்றனர். 25 மாநிலங்கள் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது. தற்போது வரை இங்கு அதற்கு பதில் இல்லை. சொல்வது ஒன்று செய்வது  ஒன்று தான் இந்த அரசு.  லஞ்சம் இல்லாத துறையே இங்கு இல்லை,’’ என்று பிரச்சாரத்தில் எடப்பாடி பேசினார். 


எடப்பாடி பழனிச்சாமி பேசியவை வீடியோவாக இதோ...



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண