தி.மு.க. ஆட்சியில் கடுமையான அதிருப்தி மக்களிடையே உள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரோபோவாக ரிமோட் ஆட்சி நடத்தி வருவதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடுமுதலமைச்சர் ஸ்டாலின் ரோபோவாக ரிமோட் ஆட்சி
விழுப்புரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. விழுப்புரம் மாவட்ட ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகளுடான கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள கட்சி நிர்வாகிகள் முனைப்புடன் செயல்பட தகவல் தொழில் நுட்ப அணி மும்முரமாக செயல்பட வேண்டும் என்றும் கட்சியில் அமைப்பு தேர்தல் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டன. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில்,”திமுக ஆட்சியில் கடுமையான அதிருப்தி மக்களிடையே உள்ளது.திமுக தீய சக்தியாக இருந்து கோடி கோடியாக கொள்ளை அடித்து ஒரு குடும்பம் மட்டும் வளர்ச்சி அடைந்துள்ளது. ” என்று தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ரோபோவாக ரிமோட் ஆட்சி நடத்தி வருவதாகவும், மக்கள் விரோத செயலில் திமுக செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார். விஜயுடன் அதிமுக கூட்டணி வைக்குமா? என்கின்ற கேள்விக்கு தேர்தல் நேரத்தில் பொதுச்செயலாளர் முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.
நேற்று : இரட்டை வேடம் போடும் கட்சி திமுக!
சென்னையில் நேற்று முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பாக எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று (நவ.16) பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பேசியதாவது, மத்தியில் பாசிச ஆட்சி நடத்தி வரும் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருவகிறது. பிரதமர் மோடியை, தமிழகத்தில் பாசிச ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் சந்தித்து விட்டு வந்த நாள் முதல் அவரது செல்ல பிள்ளையாக மாறிவிட்டார்.
இந்திய அளவில் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தி தருவது குறித்து இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட குரல் கொடுக்காதது ஏன்? இரட்டை வேடம் போடும் கட்சி திமுக, அதன் தலைவர் ஸ்டாலின். 2006ல் முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது இஸ்லாமியர்களுக்கான 3.5 விழுக்காடு இட ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது. அதற்கடுத்த ஆட்சிக்கு வந்த திமுக அதனை நடைமுறைப்படுத்தியது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.