✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

EVKS Elangovan Exclusive: கார்த்தி சிதம்பரம் சுயநலவாதி; துரோகம் செய்கிறார்- ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி

செல்வகுமார்   |  26 Jul 2024 05:24 PM (IST)

EVKS Elangovan - Karthi Chidambaram: கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்ற பின்பு கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன்  ABP நாடு-வுக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேக பேட்டி

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் , தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு கூட்டணிக்கு எதிராக  சுயநலமாக பேசுகிறார் என காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் ABP நாடு-வுக்கு தொலைபேசி வாயிலாக பிரத்யேகமாக பேட்டியளித்தார். 

சர்ச்சையான கார்த்தி சிதம்பரம் பேச்சு:

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் பேச்சானது திமுக கூட்டணிக்கிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது, தேர்தலில் கூட்டணி வைத்த என்ற ஒரே காரணத்தால், தேர்தல் இல்லாத காலத்தில் மக்களின் பிரச்னைகளை பேசாத காரணத்தினால்தான், மக்கள் புதிதாக வரும் கட்சிகளை நோக்கி நகர்கிறார்கள் என்று பேசினார். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரம் , என்கவுண்டர் விவகாரம் குறித்து, திமுக அரசுக்கு எதிராக வெளிப்படையாக பேசியது மேலும் சர்ச்சையை கிளப்பியது. 

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன்  ABP நாடு-வுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். 

அவர் அளித்த பேட்டியில், கார்த்தி சிதம்பரம் மந்திரி சபையில் இடம் வேண்டும் என்கிறார்,எப்படி சரியாக வரும். திமுக கூட்டணியில் இருப்பது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமல்ல, மோடி, நாட்டை பிரிக்க பார்க்கிறார், பாஜக உள்ளிட்ட பாசிச சக்திகளை அழிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.  எனவே, இதை நோக்கி நாம் பயணித்து வரும்போது, கூட்டணிக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. 

கேள்வி: எதற்காக கார்த்தி சிதம்பரம் இவ்வாறு பேசுகிறார்? 

பதில்: மக்களவை தேர்தலில், காங்கிரஸ் யாரும் வேலை செய்யவில்லை, திமுகதான் வேலை செய்தது. வெற்றி பெற்றதே திமுகவினால்தான். இந்த நிலையில், இதுபோன்ற பேச்சு தவறாகும். 

கேள்வி: காங். மாநில தலைவர் செல்வபெருந்தகையும், தமிழ்நாட்டில் விரைவில் காங்கிர்ஸ் ஆட்சி அமையும் என பேசியிருக்கிறாரே? 

பதில்: அவர் பேசினார். அந்த கூட்டத்தில் நானும் இருந்தேன். நானும் கருத்து கூறினேன். அவர் இப்போது, அதுபோன்று பேசுவதில்லை 

கேள்வி: உங்களது அறிவுரை என்ன? 

பதில்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே திமுகதான். திமுக தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் உடன் பிறவா சகோதரர் போல பழகி வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் இடையேயான கொள்கையானது, பாசிச- மதவெறி கொண்ட சக்திகளை எதிர்ப்பதாகும். அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு இடைஞ்சல் வருகிற மாதிரி செயல்களை செய்யக்கூடாது. 

கேள்வி: கார்த்தி சிதம்பரம், காங். மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் , அவருக்கு ஏதேனும் கட்சியில் முரண்பாடு உள்ளதா?

பதில்: செட்டி நாடில் பணக்கார குடும்பங்களில்  ஒரு குடும்பம் என்பது எனக்கு தெரியும். எவ்வளவு பெரிய ஆளாக  இருந்தாலும் , தவறான கருத்தை கூறினால் ஏற்றுக் கொள்ள முடியாது எனகாங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் ஏபிபி நாடுவுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். 

தொலைபேசி நேர்காணல்:

 

Published at: 26 Jul 2024 05:15 PM (IST)
Tags: dmk Karthi Chidambaram EVKS Elangovan CONGRESS
  • முகப்பு
  • செய்திகள்
  • அரசியல்
  • EVKS Elangovan Exclusive: கார்த்தி சிதம்பரம் சுயநலவாதி; துரோகம் செய்கிறார்- ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் அதிரடி பேட்டி
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.