ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை சுமூகமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் ஆகியோருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நடவடிக்கைகள், வாக்குப்பதிவு உள்ளிட்டவைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இடைத்தேர்தல் தொடர்பான புகார்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து துணை ஆணையர் அஜய் கேட்டறிந்ததாகவும் தகவல்.


தேர்தல் பரப்புரை: 


தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் சார்பில் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஐந்து நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பரப்புரையின் போது, கட்சிகளிடையே கருத்து மோதல்களும், பிரச்சனைகளும் ஏற்பட்டன.


ஆண்கள் - 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 பேர். 


பெண்கள் - 1 லட்சத்து 16 ஆயிரத்து 497 பேர்


இந்த வாக்களர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 


தேர்தல் அறிவிப்பு


ஈரோடு கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த ஜனவரி 4-ந் தேதி காலமானார். அவரது மறைவால், அவர் எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகித்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் இம்மாதம் (பிப்ரவரி,07) நிறைவடைந்தது. இறுதிநாளில் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலையுடன் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான நேரம் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் களைக்கட்டியுள்ளது. விதவிதமாக மக்களை கவரும் நடவடிக்கையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சியினர், தொண்டர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர். மார்ச் 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 


வேட்புமனு தாக்கல்


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைதேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், மனுவை திரும்பப் பெறுவதற்கான  நேரம் நிறைவடைந்தது. வரும் 27ம் தேதி நடைபெற உள்ள  இடைதேர்தலில் போட்டியிட 77 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 6 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து,   இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி நிறைவடைந்தது. இறுதிநாளான அன்று மட்டும் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நிமிடத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய  வந்த சிலருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இடைதேர்தலில் போட்டியிட மொத்தமாக 96 பேர் வேட்புமனுதாக்கல் செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு, 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களில் 6 பேர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக்கொண்ட நிலையில், 77 பேர் இடைதேர்தலில் போட்டியிட இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர். 


காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் அறிவித்தது முதல் திமுகவினர் வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  


இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார். ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றார்.


மேலும், அமமுக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோரை அந்தந்த கட்சிகள் அறிவித்தன. ஜனவரி 31ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தங்களுக்கான சின்னத்தை ஒதுக்காததால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தார் டிடிவி தினகரன். மறுபக்கம், திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.