ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு தொகுதியில் வீரப்பன்சத்திரம் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற நாம் தமிழர் - தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி மோதலானது. இதில் இரு கட்சியினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இவர்களை களைந்து செல்ல போலீசார் எச்சரித்தும், களைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் பரப்புரை:
வீரப்பன்சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சென்ற நிலையில், அங்கிருந்த தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் தொடங்கியது. இரண்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் கொடி கம்பங்களை எழுத்து ஒருவரு மீது ஒருவர் தாக்கியுள்ளனர். இதனை காவல் துறையினர் சற்று கட்டுப்படுத்தியிருக்கின்றனர். தடியடி நடத்தி அங்கிருக்கும் கூட்டத்தை கலைக்க முயன்றுள்ளனர். ஆனால், இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி - தி.மு.க. கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டதை முடித்துகொள்ளுமாறு சீமானிடம் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து மோதலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையின்போது பட்டியலின சமுதாய மக்கள் பற்றி சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு எதிராக கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் எழுந்த நிலையில் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் பரப்புரையில் சீமான் சர்ச்சை பேச்சு:
ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையின்போது பட்டியலின சமுதாய மக்கள் பற்றி சீமான் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவருக்கு எதிராக கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் எழுந்த நிலையில் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் :
ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4 ஆம் தேதி மரணமடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என அரசியல் கட்சிகள் கடும் போட்டிக்கு மத்தியில் களமிறங்கி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.77 பேர் இடைதேர்தலில் போட்டியிட இறுதி வேட்பாளர்களாக தேர்வாகியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க, அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி தென்னரசுவையும், ஓ.பன்னீர்செல்வம் செந்தில் முருகனையும் வேட்பாளராக அறிவித்தனர். இதனால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்ட நிலையில், இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார். ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றார்.