சேலத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சமத்துவ விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் பங்கேற்றார். விருந்து நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பொதுமக்களுக்கு அசைவ உணவு பரிமாறி, குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். சரத்குமாரின் பிறந்தநாளையொட்டி முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை என்றார். மேலும் பணம் இல்லா அரசியல் என்ற நிலையில் தேர்தலை தனித்து சந்திப்பதே எங்கள் நோக்கம் என்ற அவர், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பல மாநிலங்களில் நியாயமான திட்டங்கள் தடுக்கப்படுகின்றன என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு மக்களை நேரில் சந்தித்து அவர்களது மனநிலையை அறிவதற்காக செல்லலாம், அல்லது அவர்களது கருத்துக்கணிப்பை கேட்பதற்காக சென்றிருக்கலாம். நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் நிலைபாடு குறித்து கேட்டறிவதற்காக செல்லலாம் என்று எண்ணுகிறேன்.


மேலும் என்.எல்.சி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சரத்குமார், என்எல்சி விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் தொழிற்சாலைகளுக்காக விளைநிலங்களை கையகப்படுத்தினால் உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் தெரிவித்தார். 



நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை சமத்துவ மக்கள் கட்சி எந்தவித கூட்டணியை பற்றியும் நினைக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை 2024 நாடாளுமன்றத் தேர்தலை விட 2026 சட்டமன்ற தேர்தலில் நோக்கிய எங்களது பயணம் உள்ளது. பணமில்லா அரசியலை தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்தால்தான் வரும் காலத்தில் வரும் இளைஞர்களும் அதனைப் பின்பற்றுவார்கள். எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அதன் பின்னர் அகில இந்திய அளவில் அதனை செயல்படுத்துவோம். நடிகர் சங்க தேர்தலை பொருத்தவரை அதன் நிர்வாகிகள் தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைத்தனர் பின்னர் முடிவுகள் வெளியிடப்பட்டது. நடிகர் சங்கம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவன் நான். நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை ஒற்றுமையோடு, ஒருங்கிணைந்து கட்டி முடிக்க வேண்டும். நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தேவையான மருத்துவ வசதி மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவர்களை கோரிக்கையாக ஒவ்வொரு கூட்டத்திலும் மனுவாக அழித்து வருகிறேன். நடிகர் சங்கம் உறுப்பினர்களுக்கு பல முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் உதவி வருகின்றனர் அதனை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மேலும் ஓடிடி உள்ளிட்ட பல வழிகளில் வேலை வாய்ப்பிற்கான பெருகி வருகிறது. பல வழிகள் வந்துவிட்ட நிலையில் உங்களது திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொண்டாள் சினிமா நடிகர்கள் நலிந்த கலைஞர்களாக இருக்க மாட்டார்கள், உயர்ந்த கலைஞர்களாக ஆகிவிடுவார்கள் என்று கூறினார்.



சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்த வரை பணம் இல்லா அரசியல். பணம் இல்லா அரசியல் என்றால் ஒரு சட்டமன்ற தேர்தலுக்கு 30 கோடி வரை செலவிட வேண்டும் என்றால் நானே தென்காசியில் நிற்க முடியாது. பணம் இல்ல அரசியல் என்றால் நாட்டின் குடிமகன் பணம் இல்லை என்றாலும் தைரியமாக தேர்தலை சந்திக்க வேண்டும். தேர்தலுக்கு பணம் முக்கியமில்லை. தேர்தலுக்கு பணம் கொடுப்பது என்பது மக்களுக்கு பழகிய ஒன்றாக உள்ளது அதனை மாற்ற வேண்டும். எதையும் மாற்ற முடியும், மக்கள் நினைத்தால் எதையும் மாற்றிக் காட்ட முடியும். ஒரு புரட்சி மக்களிடமிருந்து உருவாக வேண்டும். நான் சம்பாதித்த பணம் இது இல்லை இன்று மக்கள் நினைக்க வேண்டும் . மாறுகின்ற இடத்தில் நாங்கள் இருக்கிறோம் அந்த மாற்றம் 2026 இல் வரும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.