சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் அதிமுக சார்பில் நடத்தப்பட்ட மே தின பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது கொட்டும் மழையில் நிகழ்ச்சியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய நிதியமைச்சர் முப்பதாயிரம் கோடியை உதயநிதி ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு உள்ளனர் என்று அம்பலப்படுத்தி உள்ளனர். நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் வாழ்க என்றார். இன்னும் பல கேசட்டுகள் வர இருக்கிறது. தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்கவில்லை, அறிக்கைவிட்டால் உடனடியாக பதில் அளிப்பார். இதற்கு இதுவரை பதில் அளிக்கவில்லை அப்படி என்றால் உண்மை தானே என்று தெரிகிறது. 30 ஆயிரம் கோடியை ஒரு மாவட்டத்திற்கு ஒரு கோடி கொடுத்தால் எல்லாம் மக்களும் வளம் பெற்று விடுவார்கள். அளவுக்கு மீறி பணம் இருந்தால் ஆபத்து வந்துவிட்டது. தப்பமுடியாது. அளவுக்கு மீறி அமிர்தத்தை சாப்பிட்டாலும் ஆபத்தாக மாறும், அளவுக்கு மீறி சம்பாதித்தால் இந்த நிலை தான் வரும். 



ஊழல் ஊழல் என்று பேசி வந்த முதலமைச்சர் வாய் மூடி இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர். திமுக கட்சியில் கூட்டணியில் வந்து அங்கம் வகிக்கும் கட்சிகள் யாரும் கேட்க மாட்டார்கள். நிதியமைச்சர் ஆடியோ குறித்து கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் வாய் திறக்கவில்லை, இதை கண்டு கொள்ளவில்லை ஆளும் கட்சி மூலமாக பல வசதி கிடைப்பதால் மக்களைப் பற்றி கவலையில்லை. மக்களுக்கு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் முதல் குரல் கொடுக்கின்ற கட்சி அதிமுக. 30 ஆயிரம் கோடி சுருட்டிவிட்டு இன்று வரை எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை, வாய் திறந்து பேச மறுக்கிறார்கள். மடியில் கனம் உள்ளது அதனால் பேச முடியவில்லை. பணம் எங்குதான் உள்ளது என்று கூறிவிட்டால் தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள் அதனால் யாரும் பேசவில்லை.


திமுக சொல்லும் தவறுகளை சுட்டி காட்டினால் உடனே வழக்கு இது என்ன சர்வாதிகார ஆட்சியாக என்று கேள்வி எழுப்பினார். தவறை சுட்டிக்காட்ட ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சுதந்திரம் உள்ளது. ஆட்சி மாறினால் காட்சி மாறும் முதல்வர் ஸ்டாலின். இதனை எண்ணிப் பார்க்க வேண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எவராலும் காப்பாற்ற முடியாது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்றபோது நாங்கள் தர்மத்தின் வழி நின்று செயல்பட்டதாக கூறினார்.



அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் மக்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். எல்லாத் துறையிலும் லஞ்சம் லாவண்யம் தாண்டவம் ஆடுகிறது. எல்லாத் துறையிலும் லஞ்சம் முதலில் பெற்றுவிட்டு தான் பணியை செய்ய முன் வருகிறார்கள். அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவர திட்டப் பணிகள் அனைத்திற்கும் மூடும் விழா நடத்தி விடுகின்றனர். நாட்டு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் சோதனைதான் அனுபவித்து வருகிறார்கள். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவம் நடைபெற்று வருகிறது.


தமிழக முதல்வர் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறார். பொள்ளாச்சி பற்றி பேசும் ஸ்டாலின், சேலம் என்னாச்சு என்று கேள்வி எழுப்பினார். சந்தர்ப்ப சூழ்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. இனியாவது மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும், பெண் குழந்தைகள், பெண் பிள்ளைகள் பாருங்கள் பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் அடியோடு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது எங்கும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் கையில் ஆட்சி சிக்கிக்கொண்டு சிக்கி தவித்து வருகிறது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமா கஞ்சா விற்பனை செய்து கைது செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை குறிப்பிடவில்லை இப்படிப்பட்ட முதலமைச்சர்தான் தமிழகத்தில் ஆண்டு வருகிறார் என்பது எண்ணிப் பார்க்க வேண்டும்.


சட்டமன்றத்தில் பேசியது நேரடி ஒளிபரப்பு செய்திருந்தால் மக்கள் எள்ளி நகையாடியிருப்பார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மணிமண்டபம் அமைப்பது சரி, கடலுக்குள் பேனா வைப்பது எதற்கு மக்களின் வரிப்பணத்தை வைக்கிறார்கள். மக்களின் வரிப்பணத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.