ஓபிஎஸ்-க்கு கைதட்டிய இபிஎஸ்:
பொதுக்குழு மேடையில், ஒருங்கிணைப்பாளர் என்று தமிழ்மகன் உசேன் சொன்னதும் இபிஎஸ் கைதட்டினார். இந்நிகழ்வு சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியது.
பொதுக்குழு வழக்கு:
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இந்த வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பொதுக்குழுக்கூட்டம் நடத்த அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூட்டத்தில் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற கூடாது என்று உத்தரவிட்டனர்.
பொதுக்குழு கூட்டம்:
இதனிடையே இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கு மஞ்சள் வேட்டி வெள்ளை சட்டையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்துள்ளார். ஆனால் தொண்டர்களின் கூட்டத்தில் சிக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு மணி நேரம் தாமதமாக வருகை தந்தார்.
Also Read: AIADMK Meeting Highlights: பரபரப்புக்கு பஞ்சமில்லாத அதிமுக பொதுக்குழு - 20 சுவாரஷ்ய தகவல்கள்!
தீர்மானம்:
கூட்டம் தொடங்கியவுடன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-க்கு நடுவில் தமிழ்மகன் உசேன் அமர்ந்தார். பின்னர் அதிமுக பொதுக்குழுவில் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, பேசிய தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது பொதுக்குழு மேடையில், ஒருங்கிணைப்பாளர் என்று தமிழ்மகன் உசேன் சொன்னதும் இபிஎஸ் கைதட்டினார். இந்நிகழ்வு சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்