இன்று அதிமுக பொதுக்குழு ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது. அதிமுக பொதுக்குழு பற்றிய 20 சுவாரஷ்ய தகவல்களை காணலாம்.
1. தற்காலிக அவைத்தலைவர் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம்
சென்னை வானகரத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு காலை 10 மணிக்கு கூட்டம் கூடியது
2. அதிமுக பொதுக்குழு - பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுக பொதுக்குழுவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க ஸ்ரீவாரு மண்டபத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
3.கடுமையான போக்குவரத்து நெரிசல் - மக்கள் அவதி..!
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதையொட்டி தலைவர்களின் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் பூவிருந்தவல்லி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
4.மதிய உணவு விபரக்குறிப்பு
பொதுக்குழுவையொட்டி மதிய உணவு விபரம் வெளியாகியனது. சாதம், உருளைக்கிழங்கு பொரியல், கோஸ் கேரட் பொரியல், அவியல், அப்பளம், ஊறுகாய், வத்தக்குழம்பு,சாம்பார், தயிர் சாதம், வத்தக்குழம்பு, ரசம், மோர் மிளகாய், பாதாம் கிர், வெஜ் பிலவு, பருப்பு வடை. சில இடங்களில் சட்ட விரோதமாக 12 மணிக்கு முன்னரே மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டது.
5.3 வித கோஷங்களால் அதிர்ந்த கூட்டம்:
1.ஒற்றைத்தலைமை வேண்டும் என ஒரு சாரார் கோஷம் எழுப்பினர்.
2.மற்றொரு சாரார் இரட்டைத்தலைமை வேண்டும் என கோஷம் எழுப்பினர்
3.இன்னொரு சாரார் மோதல் போக்கு வேண்டாம் என கோஷம் எழுப்பினர்.
6.ஓ.பன்னீர்செல்வம் வருகை
பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இபிஎஸ் அவருக்கு ஆதரவாளர்கள் எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
7.ஓபிஎஸ் டிரைவரை மிரட்டிய ஈபிஎஸ் ஆதரவாளர்கள்:
ஓ. பன்னீர் செல்வம் வந்த பிரச்சார வாகனத்தை அரங்கில் உள்ளே நிறுத்த கூடாது என்று எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் வண்டியை தட்டி வெளியே கொண்டு போ என்று ஓட்டுநரை மிரட்டினார்கள். இதனையடுத்து ஓட்டுநர் பயந்து போய் வண்டியை பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வெளியே வண்டியை எடுத்து சென்றார்.
8. இபிஎஸ் வருகை: அண்ணன் எடப்பாடியார் வாழ்க என முழக்கம்:
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்டபத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமியை ‘அண்ணன் எடப்பாடியார் வாழ்க’ என முழக்கமிட்டு தொண்டர்கள் வரவேற்றனர்.
9.ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு நடுவில் அமர்ந்த தமிழ் மகன் உசேன்:
பொதுக்குழுவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு நடுவில் உள்ள சேரில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அமர்ந்தார்.
10.வணக்கம் சொன்ன ஓபிஎஸ்... எழுந்து நின்று கைகூப்பிய இபிஎஸ்
பொதுக்குழுவில் இபிஎஸ்-க்கு ஓபிஎஸ் வணக்கம் சொன்னார். இதை கண்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் எழுந்து நின்று கைக்கூப்பி வணக்கம் சொன்னார்.
11.இரங்கல் தீர்மானத்தை செம்மலை வாசித்தார்:
ஜெயலலிதா இல்லத்தில் உதவியாக இருந்த ராஜம்மாள், தரங்கை கண்ணன், வாரிய தலைவர் அமிர்த கணேசன், தலைமை கழக ஊழியர் சாரால், திருச்சி- முன்னாள் மேயர் ஜெயா உள்ளிட்ட தொண்டர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
12.அனைத்தையும் நிராகரிக்கிறோம் - சிவி சண்முகம் ஆவேசம்:
அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக பேசினார். மேலும் அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டார்கள் என முனுசாமி தெரிவித்தார். அனைத்தையும் நிராகரித்த அவர்களின் ஒற்றை கோரிக்கை ஒற்றைத்தலைமை. ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது அந்த தீர்மானங்களோடு இணைக்கப்படுகிறதோ, அப்போது மற்றொரு தலைமை பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
13.கோபடைந்த இபிஎஸ்:
அப்போது அவை தலைவர் தீர்மானங்கள் குறித்து இபிஎஸ் பேச ஆரம்பித்த போது, இபிஎஸ் ஆதரவாளர்கள் மாலை அணிவிக்க வந்தனர். இதனால் இபிஎஸ் கோபடைந்தார். அப்போது இருங்கங்கப்பா... இருங்கங்க...என்னங்க போங்க....சும்மா என கோபடைந்தார். இதனால் அணிவிக்க வந்த மாலையை இபிஎஸ் ஆதரவாளர்கள் மாலையை அணிவிக்காமல் கொண்டு சென்றனர். இதையடுத்து இபிஎஸ் பேச ஆரம்பித்தார்.
14. நிரந்தர அதிமுக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு:
அதிமுக-வின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது. அதிமுக அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்மகன் உசேன் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தமிழ்மகன் உசேன் நன்றி தெரிவித்தார்.
15.ஓபிஎஸ்-க்கு கைதட்டிய இபிஎஸ்:
இதையடுத்து, பேசிய தமிழ்மகன் உசேன் பொதுக்குழுவுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அப்போது பொதுக்குழு மேடையில், ஒருங்கிணைப்பாளர் என்று தமிழ்மகன் உசேன் சொன்னதும் இபிஎஸ் கைதட்டினார். இந்நிகழ்வு சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியது.
16.”ஜுலை 11- எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார்”:
ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என கே.பி.முனுசாமி பேசினார்.
17.மேடையில் இருந்து எழுந்த வெளியேறிய ஓபிஎஸ்..
அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறினார் ஓ.பன்னீர்செல்வம்.
18.சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு- வைத்தியலிங்கம்
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என முழக்கமிட்டார். பொதுக்குழு அறிவிப்பு தேதி செல்லாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் பேசினார்.
19.ஓபிஎஸின் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு என தகவல்:
அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்த ஓபிஎஸின் மீது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்கள் வீசியதாகவும், காகிதங்கள் வீசப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
20.வரலாற்றிலே:
அதிமுக வரலாற்றிலேயே முதன்முறையாக சிறிது நேரத்திலேயே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டமாக இன்றைய அதிமுக கூட்டம் மாறியிருக்கிறது.