Minister Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவர்களது உறவினர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அண்மையில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  


இன்று காலை அதாவது ஜூன் மாதம் 13ஆம் தேதி காலை 9 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீட்டிலும், அமைச்சரின் சொந்த ஊரான கரூரிலும் சோதனைகள்  ஒரே நேரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 


எங்கெங்கு சோதனை 


சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 


கரூரில் எங்கெங்கு சோதனை


1.ராமேஸ்வரப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு.


2.கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சரின் தம்பி அசோக்குமார் வீடு. 


3.ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணியின் வீடு. 


4.வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள சண்முகம் என்பவர் வீடு. 


5.மண்மங்கலம் தாலுக்கா பகுதியில் அமைந்துள்ள அசோக்குமாரின் மாமியார் வீடு. 


6.வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கார்த்தி என்பவர் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 


7. ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் சரக்கு வாகன் ஒப்பந்ததார் சச்சிதானந்தன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்


8. கரூர் செங்குந்தபுரம் ஆடிட்டர் சதீஷ் வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 


அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்கள் கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கத்தயார் எனவும், மேலும், இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத்தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.  தனது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்துள்ளனர் என்பதை அறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது காலை நேர நடை பயிற்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு, உடனே தனது வீட்டிற்கு திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “ அமலாக்கத்துறையினர் எந்த நோக்கத்துடன் வந்துள்ளனர் எனத் தெரியவில்லை, பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், எனக்கு இந்த சோதனை குறித்து எந்த முன் தகவலும் வரவில்லை. அமலாக்கத்துறையோ அல்லது வருமானவரித்துறையோ அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார். மேலும், கைப்பற்றப்படும் ஆவணங்களுக்கு விளக்கம் அளிக்கவும் தயார்” என கூறினார். 


ஏற்கனவே கடந்த மாத இறுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் ஒருவராத்திற்கு சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாகத்தான் அமலாகத்துறையின் சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.