சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பாக பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி மையத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் தையல் இயந்திரத்தில் அமர்ந்து துணி தைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, நேற்றைய தினம் சேலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வையாபுரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்திருப்பார் ஆனால் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அப்படி பேசி உள்ளார். அதிமுக ஒரு ஜனநாயகக் கட்சி அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு பதவிக்கு வரமுடியும். சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இளங்கோவன் மத்திய கூட்டுறவு வங்கியில் பதவிக்கு வருவதற்கு முன்பாக இருந்த வைப்புத் தொகையை விட, தற்போது கூடுதலாக வைப்பு தொகையை மத்திய கூட்டுறவு வங்கி பெற்றுள்ளது.மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்ட நிலையில் கூடுதல் லாபம் ஈட்டி வருகிறது. அந்தளவிற்கு நிர்வாகத் திறமை கொண்டவராக இளங்கோவன் இருக்கிறார்.
அனைத்துக் கட்சிகளிலும் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு இதுபோன்று ஒரு சிலர் இருப்பது இயல்புதான் ,ஒவ்வொருவருக்கும் பிடித்தவராக பொறுப்பு வழங்க முடியாது. ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இது அனைத்து கட்சிகளும் உள்ளது. அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.தற்போது நான் பேசிக்கொண்டிருக்கும் போது மின்வெட்டு ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் தான் இருப்பதாக கூறினர். வீட்டிலிருந்து கிளம்பும்போது மின்வெட்டு ஏற்பட்டது. எல்லாப் பகுதிகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாய பணிகள் நெசவுத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவே மின்தடை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தேவையான அளவு நிலக்கரியை கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்றார். மின்வெட்டு விவகாரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தவறான தகவல்களை தெரிவிக்காமல் பொதுமக்களின் பொதுபிரச்சினை என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சரியான நேரத்தில் திட்டமிடல் செய்து செயல்பட்டதால் தான் தடையில்லா மின்சாரம் அதிமுக அரசு கொடுத்தது. தொழில்வளம் மிகுந்த மாநிலமாக திகழ்ந்தது என்று பெருமிதமாகக் கூறினார். தமிழக அரசு மற்ற மாநிலங்களைப் போல பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் பேசினார். வருகின்ற திங்கட்கிழமை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நான் உள்ளிட்டோர் தஞ்சைக்கு சென்று தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து அதிமுக சார்பாக நிவாரணதொகை வழங்க உள்ளோம். அதேபோன்று காயமடைந்த மக்களுக்கும் நிதி உதவி வழங்க உள்ளோம் என்றும் கூறினார்.