அதிகமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து ஆளுநரிடம் தெரிவித்து, அவர் மூலம் உள்துறை அமைச்சர் சரி செய்ய முடியுமா என்பதற்காக தான் ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்திக்க சென்றதாகவும், சந்திப்பிறகு அரசியல் பேசவேண்டும் என்பதற்காக சட்டஒழுங்கு குறித்து பேசியுள்ளதாகவும் அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.


செஞ்சி அருகேயுள்ள வேம்பியில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் அரசு நலத்திட்டம் வழங்கும் விழா மற்றும் புதிய மின் மாற்றி துவக்க விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு நலத்திட்டங்களை வழங்கினார். இவ்விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி, ஆட்சியர் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தமிழக  முதலமைச்சர் ஸ்டாலின் வேளாண்மைக்கு என்று தனித்துறையை உருவாக்கி டெல்டா பகுதியாக இருந்தாலும் விழுப்புரம் போன்ற விவசாய பகுதியாக இருந்தாலும் கலைஞரின் வேளாண் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகளை உருவாக்கி செயல்படுத்தி வருவதாகவும், தரிசு நிலங்களை கண்டறிந்து அதற்கு ஏற்ப உரமிடுதல் போன்ற பல்வேறு நல்ல திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருவதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற உடன் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


விவசாயிகளின் நலனை கருதி செயல்படுகிற அரசாக தமிழக அரசு உள்ளதாகவும் அறிவியல் ரீதியாக விவசாயம் செய்ய வேண்டும் என்பதற்காக வேளாண்மை துறையை தனியாக உருவாக்கி செயல்படுத்தி தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக கூறினார். மேலும் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதை டிவியில பார்த்து தெரிந்து கொண்டதாக தெரிவித்தவர்  தான் எடப்பாடி பழனிசாமி அவரு எல்லாம் சொல்வார் அவருக்கிட்ட இல்லாததா என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவினருக்கு பாகம் புகட்டுற வகையில் தமிழகத்தில் ஸ்டாலினை முதல்வராக்கி இருப்பதாகவும், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்க தமிழக மக்கள் வாய்ப்பளித்து உள்ளதாகவும் ஆளுநரை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க சென்றது அதிமுக கட்சியில் அடித்துகொள்ளவதை ஆளுநரிடம் சொல்லி உள்துறை அமைச்சரிடம் ஆளுநர் தெரிவித்து சரி செய்ய முடியுமா என்பதற்காக தான் ஆளுநரை சந்திக்க சென்றிருக்கிறார்கள் என்றும் அவர்கள் ஆளுநரை சந்திக்க சென்ற காரணம் வேற வெளியே வந்து எடப்பாடி பழனிசாமி அரசியல் பேச வேண்டுமென்று பேசியதாகவும் தமிழகத்தில் அனைத்து துறைகளும் தமிழக முதலமைச்சரின் ஆட்சியின்  சிறப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறினார்.