இரட்டைத்தலைமையால் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும் என எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 


 


ஓபிஎஸ் பற்றி அவர் பேசும் போது, “ ஒற்றைத்தலைமை பிரச்னை துவங்கிய போதே தலைவர்கள் அவரிடம் பேசினார்கள். அதற்கு அவர் கடைசி வரை இசைவு கொடுக்க வில்லை. யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். இரட்டைத்தலைமையால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். ஒற்றைத்தலைமை என்ற குரல் ஓங்கி ஒலித்த நிலையில், அது இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 


 






எதெற்கெடுத்தாலும் அவர் சொல்வது விட்டுக்கொடுத்தோம் விட்டுக்கொடுத்தோம் என்பது..  உண்மையில் நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்கிறார். போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அவர் எதிரணிக்கு ஜீவ் ஏஜண்டாக இருந்தார். நீங்களா அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கீறீர்கள் என்கிறீர்கள்” என்றார். 


 






முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் அதன் உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், அதிமுகவின் பொதுச்செயலளாராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து ஓபிஎஸ் சிடம் கேட்ட போது, ஈபிஎஸ் -சை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். தொடர்ந்து 145 உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண