அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அடுத்த 4 மாதங்களில் அதிமுக பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தலை நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 இந்நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் சிலர் ஒபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். அப்போது அவர்கள் முன்பு பேசிய கே.பி.முனுசாமி, “கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நீங்கள் கேட்டு கொண்டதால் அவரை விரைவில் கட்சியிலிருந்து நீக்கப்படும் தீர்மானத்தை எடப்பாடி பழனிசாமி விரைவில் கொண்டு வருவார். அதுவரை அமைதியாக இருங்கள்” எனத் தெரிவித்தார். 


 






பொதுக்குழு வழக்கும்..பிரச்னையும்.. 


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்துவந்த நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் காலியாக விடப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ், மற்றும் ஈபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்தது.


இதனையடுத்து தற்காலிகப் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக, சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23ம் தேதி தொடங்கியது. ஆனால், பொதுக்குழுத் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டு அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அக்கூட்டத்தில், ஓபன்னீர்செல்வத்தை அதிமுகவை விட்டே நீக்கப்படலாம் என்றும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என்று பரபரப்புத் தகவல்கள் வெளியான நிலையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே முடிவடைந்தது.


இதனையடுத்து சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 11ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளும் காலாவதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவிற்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த வழக்கானது கடந்த 7ம் தேதி மற்றும் 8ம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரண்டு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.


ஓபிஎஸ் தரப்பு, ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று கூறியதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என கட்சி விதிகள் சொல்கின்றன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.


பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு 2,665 உறுப்பினர்களில் 2,190 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் 2,432 உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை குறித்து விவாதித்து முடிவெட்வுக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். எனவே, அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கேட்ட ஓபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டது. இந்தச் சூழலில் இன்று காலை நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண