வருகிற 2026 தேர்தலில் திராவிட மாடல் version 2.0 loading என கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் முதல் அண்ணா பல்கலைக்கழக பாலியல் துன்புறுத்தல் சம்பவம் வரை பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்டாலினை பொளந்து கட்டிய இபிஎஸ்:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மாநில சுயாட்சி கனவை நனவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தமிழர்கள், மாநில உரிமைக்காக எனது பயணம் தொடரும். நீங்கள் பார்த்தது திராவிட மாடலின் பார்ட் - 1தான். 2026 இல் version 2.0 loading" என்றார்.
இதற்கு பதிலடி அளித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி! போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி!
போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure. இதில் இன்று Version 2.0 Loading ஆம்!
அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி! 2026-ல் ஒரே version தான் - அது அதிமுக version தான்! மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin… என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: CM Siddaramaiah: அடிங்கு..! கருப்புக் கொடியால் கடுப்பான சி.எம்., ASP-யை அடிக்க கை ஓங்கிய வீடியோ வைரல்