மத்திய பாஜக அரசு நடைமுறைப்படுத்த துடிக்கும் தொகுதி மறுசீரமைப்பால், மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டும் என்பதால் தமிழகத்தில் மக்கள் தொகையை அதிகப்படுத்தவேண்டும் என்றும் அதற்காக 3வது குழந்தையை தம்பதியினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
3வது குழந்தை பெற்றால் சலுகை
3வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதியினருக்கும் தமிழ்நாடு அரசு சலுகை அளிக்க வேண்டும் என்றும் திமுக பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ மதியழகன் பேசியுள்ளார். குடும்ப கட்டுப்பாடு முறையை கடுமையாக பின்பற்றியதால் தமிழக அரசுக்கு அங்கீகாரம் தருவதற்கு பதில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைத்து தமிழகத்திற்கு அநீதியை மத்திய பாஜக அரசு ஏற்படுத்த முயல்கிறது என திமுகவினர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், திமுக எம்.எல்.ஏ இப்படியான கோரிக்கையை வைத்துள்ளார்.